- Advertisement -
Homeபொழுதுபோக்குநானும் முதலில் அவரை பார்த்து பெருமையாக நினைத்தவன் தான். அதற்கு பிறகுதான் அவரது உண்மை முகம்...

நானும் முதலில் அவரை பார்த்து பெருமையாக நினைத்தவன் தான். அதற்கு பிறகுதான் அவரது உண்மை முகம் தெரிந்தது – முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

சுப்ரமணியபுரம் படத்துக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்ற பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. அதன்பிறகு தமிழோடு விளையாடு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஜேம்ஸ் வசந்தன் இருந்து வருகிறார். இசைஞானி இளையராஜா குறித்தும் பலமுறை கடுமையாக விமர்சித்தவர் ஜேம்ஸ் வசந்தன்.

இசையில் இளையராஜாவை குருவாக மதிப்பேன் என்று சொல்லும் ஜேம்ஸ் வசந்தன், தனிப்பட்ட முறையில் இளையராஜாவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதே போல் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயை ஆரம்பத்திலிருந்து கடுமையாக விமர்சித்து வருபவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

இப்போது விஜய் தமிழக முதல்வரான பிறகும் தொடர்ந்து அவரை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். விஜய் ஒரு நடிகர். அந்த கவர்ச்சியால் மக்கள் ஏமாந்து போய் வாக்களித்து வெற்றி பெறச் செய்துவிட்டனர் என்றும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் தவெக ஆட்சியை கோமாளிகளின் ஆட்சி என்றும் அங்குள்ள அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எல்லாம் சினிமா டிக்கெட் விற்றவர்கள், போஸ்டர்கள் ஒட்டியவர்கள் என்றும் கடுமையாக பேசியிருக்கிறார். அந்த நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, விஜயின் அமைச்சர்களை, அமைச்சர்களாக ஏற்க மனசு தயங்குகிறது.

இவர்கள் யாரும் மக்கள் சேவைக்காக வந்தவர்கள் இல்லை. போஸ்டர் ஒட்டியவர்கள் பிளாக் டிக்கெட் விற்றவர்கள் தியேட்டரில் விசில் அடித்தவர்கள் தான் இப்போது அமைச்சர்களாக உள்ளனர். அவர்களது பெயர் என்னவென்று விஜய்க்கே தெரியாது.ஒரு நடிகர் முதலமைச்சர் ஆனதால் உருவான இந்த அமைச்சரவையிடம் இருந்து கோமாளிகளை தான் எதிர்பார்க்க முடியும் என்று ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் இப்படி பேசுவதால் நான் திமுகவின் ஆதரவாளர் என்று பலரும் கருதுகின்றனர். நானும் விஜயை மக்களை போல முதலில் ஆதரித்தேன். 250 கோடி ரூபாய் சம்பளத்தை இழந்து விட்டு மக்கள் பணி செய்ய அவர் வருகிறாரே என்றுதான் நினைத்தேன். ஆனால் விக்கிரவாண்டியில் அவர் பேசிய முதல் மாநாட்டில்தான் அவரது உண்மையான முகம் சுயரூபம் எனக்கு தெரிந்தது என்றும் கூறியிருக்கிறார்.

சற்று முன்