- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தில் இப்படி ஒரு டிவிஸ்ட் இருக்குதா? அப்பா விஜயுடன் மோதுவது மகன் விஜய்...

தி கோட் படத்தில் இப்படி ஒரு டிவிஸ்ட் இருக்குதா? அப்பா விஜயுடன் மோதுவது மகன் விஜய் இல்லையாம்… அத்தனை கொலைகளை செய்வது யார் தெரியுமா? – அட இது வேற லெவல் சம்பவமா தெரியுதே!

- Advertisement -

நடிகர் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து திரைக்கு வந்துள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தின் மோகன் வில்லனாக இருந்தாலும், படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருப்பதும் விஜய்தான். அப்பா விஜயை மகன் விஜய் எதிர்த்து இருவருக்கும் நடக்கும் பிரச்னைகள்தான் இந்த படத்தின் கதைக்களம்.

துவக்கத்தில் சினேகாவுடன் தாய்லாந்து செல்லும் விஜய், அங்கு தன் மகனை இழந்து விடுகிறார். 5 வயது மகன் ஜீவன் விபத்தில் இறந்து விட்டதாக விஜய் நினைக்க, அந்த சிறுவனை கடத்தி வளர்த்து ஆளாக்கி, விஜய்க்கு எதிரான ஒரு வில்லனாக திருப்பி விடுகிறார் மைக் மோகன். அப்படி விஜய் வீட்டுக்குள் வாலிபனாக நுழையும் விஜய் செய்யும் அட்ராசிட்டிதான் படத்தின் கதை.

- Advertisement -

அப்பா விஜய், பாசத்துக்குரிய தந்தையாகவும் அதே நேரத்தில் கடமை தவறாக நேர்மையான அதிகாரியாகவும் நடிப்பில் அசத்துகிறார். அதே நேரத்தில் தந்தையுடன் வீட்டில் இருந்துக்கொண்டே அவரது ரகசியங்களை தெரிந்துக்கொண்டு அவருக்கு முன்பாக சென்று முறியடிக்கிறார் மகன் விஜய். ஜெயராம், அஜ்மல், பிரசாந்த், பிரசாந்த் மகளும் மற்றும் தனது காதலியான மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோரை போட்டு தள்ளுகிறார் மகன் விஜய்.

நடக்கும் சம்பவங்களே புரியாமல் அப்பா விஜய் தடுமாறும் போது ஒரு கட்டத்தில் தனது மகன் ஜீவன்தான் குற்றவாளி எனத் தெரிந்து நொறுங்கிப் போகிறார். இதில் இறந்து போன பிரசாந்த் உயிரோடு வருவது, விஜயின் நண்பர் பிரபுதேவா, வில்லனுக்கு ஆதரவாளராக இருப்பது போன்ற டிவிஸ்ட்டுகள் யாருமே எதிர்பார்க்காததாக இருக்கிறது.

- Advertisement -

தி கோட் படத்தை பொருத்த வரை அப்பா விஜயை விட, மகன் விஜய் வில்லன் நடிப்பில் அதிக மார்க் வாங்குகிறார். குறிப்பாக அந்த நக்கல், நையாண்டி, குசும்பு, விளையாட்டுத் தனம், வில்லத்தனம் என நடிப்பில் சகல எல்லைகளையும் தொட்டுக்காட்டி அசத்தி இருக்கிறார். ஆனால் படத்தின் இறுதியில்தான் மகன் விஜயாக படம் முழுவதும் வருவது விஜய் அல்ல, விஜயின் குளோனிங்தான் என்பதை சில காட்சிகள் மூலம் வெங்கட்பிரபு காட்டியிருக்கிறார்.

அதாவது விஜய் மகன் ஜீவனை கடத்திய விஜய், அவரை மூலமாக கொண்டு 2 விஜய்களை குளோனிங் செய்து அதில் ஒருவரை தான் காந்தியாக நடித்துள்ள விஜய் வீட்டுக்கு அனுப்புகிறார். ஜெமினி மேன் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த கதையில் மகனாக வருவது குளோனிங் தான். அதையே தான் வெங்கட்பிரபுவும் செய்திருக்கிறார். ஆனால் விஜய் மகன் அல்ல, விஜய் உருவத்தில் உருவாக்கப்பட்ட குளோனிங் என்பதை கடைசிவரை ரசிகர்களுக்கு சொல்லாமல் விட்டுவிட்டார் என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்