- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் போட்டியாளர் அர்ச்சனா இப்படி ஒரு பழக்கம் இருக்கறவரா? - இதுகுறித்து விமர்சித்து பேசிய இசையமைப்பாளர்...

பிக்பாஸ் போட்டியாளர் அர்ச்சனா இப்படி ஒரு பழக்கம் இருக்கறவரா? – இதுகுறித்து விமர்சித்து பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 இப்போது நடந்து வருகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் நிறைவடைய உள்ளது. நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 6 ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி, கடுமையான விமர்சனம், சர்ச்சைகள் நிறைந்ததாக காணப்படுகிறது.

குறிப்பாக பிக்பாஸ் வீட்டுக்குள் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை சொல்லி போட்டியாளர் பிரதீப் ஆண்டனியை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றியதால், கமல் கடுமையான சர்ச்சையில் சிக்கினார். அர்ச்சனாவிடம் சொருகிடுவேன் என்று மிரட்டிய நிக்ஸன் எச்சரிக்கை மட்டுமே செய்யப்பட்டார் என்பதும் விமர்சிக்கப்பட்டது.

- Advertisement -

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில், ஷூட்டிங் சென்ற இடத்தில் தெலுங்கு நடிகர் ஒருவர், தன்னை நைட் ரூமுக்கு வந்துடு என்று அழைத்தது குறித்து, விசித்ரா பேசியது பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. அது தெலுங்கு நடிகர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணன் என்று பரவிய தகவலும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்தது.

இதற்கிடையே வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவர் அர்ச்சனா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடரில் அர்ச்சனா என்ற கேரக்டரில் நடித்து மிக பிரபலமானவர். சில டிவி நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். விஜய் டிவி பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பலரது கவனம் பெற்றவராக இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமூகம், அரசியல், சினிமா என பொதுவான விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் வழக்கம் கொண்ட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இசைஞானி இளையராஜா குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர். ஒரு சிறந்த இசையமைப்பாளராக அவர் எனக்கு குருவை போன்றவர். ஆனால் ஒரு மனிதராக அவரது பண்புகள் மிகவும் கீழ்த்தரமானது என்று அவர் பேசியது செம வைரலானது.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஜேம்ஸ் வசந்தன் பேசியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா புகைபிடிக்கும் பழக்கம் குறித்து அதிகமாக பேசப்படுகிறது. அவர் புகைபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டத்தை வெல்ல ஒரு நல்ல தகுதி இருக்க வேண்டும். அந்த வகையில் நல்ல ரோல் மாடலாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர் விசித்ரா மட்டும்தான். அவருக்கு பட்டத்தை கொடுக்கலாம் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்