- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தி சினிமாவில் என்னை அதற்காக மட்டுமே பயன்படுத்தி கொள்கின்றனர் - ஜனநாயகன் பட நாயகி பூஜா...

இந்தி சினிமாவில் என்னை அதற்காக மட்டுமே பயன்படுத்தி கொள்கின்றனர் – ஜனநாயகன் பட நாயகி பூஜா ஹெக்டே வேதனை!

- Advertisement -

கடந்த 2012ம் ஆண்டில் வெளியான படம் முகமூடி. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகனாக ஜீவாவும் வில்லனாக நரேனும் நடித்திருந்தனர். பங்களா வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதிகளை குறிவைத்து கொன்று பணம் நகையை கொள்ளையடிக்கும் முகமூடி கொள்ளையர் பற்றிய கதைக்களமாக இந்த படம் இருந்தது.

இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே அறிமுகமானார். ஆனால் இந்த படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், அவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு மற்றும் இந்தியில் நிறைய படங்களில் நடித்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக மாறினார்.

- Advertisement -

அதன்பிறகு தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். நடிகர் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறாத போதிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. ரெட்ரோ ஜனநாயகன் படங்களை தொடர்ந்து இப்போது கூலி படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம் ஆடியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, என்னை கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாட லோகேஷ் கனகராஜ் அழைத்த போது அது அந்த படத்தின் வியாபாரத்தை பெரிதுபடுத்தும் என்று நம்பி அவர் என்னை மதித்து அழைத்ததற்கு நன்றி. மேலும் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது.

- Advertisement -

இந்தி சினிமா துறையில் என்னை வெறும் அழகு சேர்க்கும் கதா பாத்திரங்களுக்காகவே படத்தில் கமிட் செய்கின்றனர். கவர்ச்சியாக மட்டுமே இந்தியில் நான் காட்டப்படுகிறேன். நான் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததை அவர்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

நான் இந்த இடத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜூக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னை ரெட்ரோ படத்தில் ருக்மணி என்ற கேரக்டராக மாற்றினார். அவர் என் நடிப்பு ஆற்றலை நம்பினார் என்று நடிகை பூஜா ஹெக்டே வேதனையாக கூறியிருக்கிறார். இப்போது காஞ்சனா 4 படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். மேலும் விஜயுடன் ஜனநாயகன் படத்திலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்