- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் சேட்டிலைட் உரிமம் - தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் சேட்டிலைட் உரிமம் – தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்!

- Advertisement -

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர்கள் அட்லி நெல்சன் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஜனநாயகன்படத்தின் வியாபாரத்தை பொருத்தவரை இதுவரை கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்திருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 121 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமம் பற்றிய ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் 40 கோடி ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெளியான இந்த தகவலின்படி ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் வியாபாரம் மட்டுமே கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கு மேல் ஜனநாயகன் படத்துக்கு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வழக்கமாக நடிகர் விஜய் நடிக்கும் படங்களை சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தான் அதிக விலை கொடுத்து வாங்கி ஒளிபரப்பு செய்வது வழக்கமாக நடந்து வந்தது. ஆனால் இந்த முறை ஜனநாயகன் படத்தை சன் டிவி நிறுவனம் வாங்க முன் வரவில்லை என்று தெரிகிறது. ஏனெனில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார்.

மேலும் அவர் ஆளுங்கட்சி திமுக குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.வருகிற 2026 சட்டசபை தேர்தலில் ஆளும்கட்சியான திமுகவை எதிர்த்துதான் விஜய் களத்தில் இறங்கி பணி செய்து வருகிறார். எனவே நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை இந்த முறை சன் நெட்வொர்க் நிறுவனம் வாங்க மறுத்துவிட்டது. இதையடுத்து தான் ஜீ தமிழ் சேனல் இந்த படத்தை ரூ. 40 கோடிக்கு வாங்கியிருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்