- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் - கோவையை தொடர்ந்து தளபதி அங்கு வருகிறாரா?...

ஜனநாயகன் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – கோவையை தொடர்ந்து தளபதி அங்கு வருகிறாரா? போடு வெடிய…

- Advertisement -

நடிகர் விஜய் கடைசியாக நடித்த வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தி கோட் என அழைக்கப்பட்ட இந்த படம் கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் வசூலில் ரூ. 445 கோடி வசூலித்து முதலிடம் பிடித்தது.

இப்போது நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ஜனநாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

இதுதான் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஏனெனில் இந்த படத்தை முடித்த பிறகு தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருக்கிறார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல்வர் நாற்காலியை குறி வைத்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம் 90 சதவீத படப்பிடிப்பை முடித்து விட்டது. வரும் மே மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. பையனூரில் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகளை எடுத்து முடித்த நிலையில், அடுத்ததாக கொடைக்கானலில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

- Advertisement -

வருகிற மே 2ம் தேதி முதல் கொடைக்கானலில் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் துவங்கி 2 வாரங்களுக்கு அங்கு நடக்க இருக்கிறது. சமீபத்தில் கோவையில் 2 நாட்கள் நடந்த தவெக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார். இதையடுத்து அவர் கொடைக்கானலில் நடக்க உள்ள ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

அதாவது ஜனநாயகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் சிலர் அவருக்கு உதவுவதாகவும் அதற்காக அவர் கொடைக்கானலில் அவர்களுடன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவை படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளாக வருகின்றன. இதற்காக தான் நடிகர் விஜய் அடுத்ததாக கொடைக்கானல் செல்ல இருப்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்