- Advertisement -
Homeபொழுதுபோக்குமண்டாடி படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் திடீரென மாயமான நடிகர் சூரி - சீக்ரெட் ஆக யாருக்கும்...

மண்டாடி படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் திடீரென மாயமான நடிகர் சூரி – சீக்ரெட் ஆக யாருக்கும் தெரியாமல் அவர் அங்குதான் இருந்தாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகமான சூரி இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து பெரிய வரவேற்பை பாராட்டை பெற்றவராக மாறியிருக்கிறார். விடுதலை விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி மாமன் படங்களை தொடர்ந்து நடிகர் சூரி இப்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதிகளில் சில மாதங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. மகிமா நம்பியார் சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.

இந்த படம் மிகவும் முக்கியமான ஒரு கதைக்களத்தில் உருவாகி வருவதால் கதாநாயகன் சூரி படம் முழுவதும் சண்டை காட்சிகளில் கூட டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். இந்த படம் சூரியின் சினிமா பயணத்தில் அடுத்த கட்ட நகர்வுக்கு முக்கிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை பெரிய அளவில் ரசிகர்களால் பேசப்படும் என்கின்றனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூரிக்கு திடீர் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷூட்டிங் இடைவேளையில் மதியம் அவர் சாப்பிட உணவு சேராமல் புட் பாய்ஷன் ஆகியிருக்கிறது. ஆனால் யாரிடமும் இதுபற்றி சொல்லாத நடிகர் சூரி, அன்று மாலை படப்பிடிப்பு முடிந்தவுடன் நேராக காரில் புறப்பட்டு மதுரைக்கு வந்திருக்கிறார்.

அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முழுவதும் ஓய்வில் இருந்த சூரி மறுநாள் மாலை மீண்டும் மதுரையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதிக்கு சென்று படப்பிடிப்பில் வழக்கம் போல கலந்துக்கொண்டு நடித்திருக்கிறார்.

தன்னுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது படக்குழுவுக்கு தெரிந்தால் படப்பிடிப்பு ரத்தாகும். தேவையில்லாத படப்பிடிப்பு செலவுகள் ஏற்படும். ஏற்கனவே கமிட் ஆன விஷயங்கள் தள்ளிப் போகும் என்பதால் யாரிடமும் சொல்லாமல் அவரே மதுரைக்கு சென்று மருத்துவ சிகிச்சை செய்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார். இந்த அளவுக்கு நடிகர் சூரி சினிமா நடிப்பு மீதும் தொழில் மீதும் காட்டும் அக்கறையும் மரியாதையும் ரசிகர்களிடம் பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது.

சற்று முன்