- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயுடன் நேரடியாக மோத போகும் பிரபல தெலுங்கு நடிகர்... அப்போ பொங்கலுக்கு செம ட்ரீட்...

விஜயுடன் நேரடியாக மோத போகும் பிரபல தெலுங்கு நடிகர்… அப்போ பொங்கலுக்கு செம ட்ரீட் காத்துகிட்டு இருக்கு போங்க…

- Advertisement -

விஜய் தற்போது தனது கடைசி திரைப்படமான ஜனநாயகனில் நடித்து முடித்து இருக்கிறார். சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று என தரமான திரைப்படங்களை கொடுத்த ஹெச் வினோத் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். கடைசியாக இவர் அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

இப்படியான சூழலில்தான், விஜய்யை இயக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அவர் ஜனநாயகன் படத்தின் சூட்டிங் பணிகளை முடித்திருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. மமீதா பைஜூவுக்கும் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசிய மமீதா,

- Advertisement -

முதல் நாள் சூட்டிங்கிலேயே விஜயுடன் நடனமாடும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் பாபி தியோல். இவர் ஏற்கனவே பாலிவுட் திரைப்படமான அனிமல் திரைப்படத்தில் தனது வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருந்தார். சூர்யாவுடன் கங்குவா திரைப்படத்திலும் நடித்திருந்தார் பாபி தியோல்.

இதுபோக பிரகாஷ்ராஜ் நரேன் பிரியாமணி உள்ளிட்டோரும் ஜனநாயகன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இதில் நரேன் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் குறைவான காட்சிகளிலேயே அவர் வந்தாலும் அது அழுத்தம் நிறைந்ததாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். படத்தில் விஜய்க்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் வினோத்.

- Advertisement -

அனிருத் இசையமைப்பில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. தளபதி கச்சேரி என இந்த பாடல் தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோக எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடலும், ஜனநாயகனின் இடம் பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் அதே தேதியில் பிரபாஸ் நடித்திருக்கும், ராஜா சாப் திரைப்படமும் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படங்கள் எதுவும் அமையவில்லை. சலார் திரைப்படம் மட்டும் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்று, வசூலையும் ஈட்டியது. இந்த நிலையில் பிரபாஸுக்கு ராஜா சாப் திரைப்படம் திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாரர் கலந்த கமர்சியல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் ஜனநாயகன் தெலுங்கில் ராஜா சாப் என இந்த பொங்கலுக்கு இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகின்றன.

- Advertisement -

சற்று முன்