- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் திரைப்படத்திலிருந்து வந்த சின்ன அப்டேட்... விஜய் ரசிகர்கள் ஹாபி அண்ணாச்சி...

ஜனநாயகன் திரைப்படத்திலிருந்து வந்த சின்ன அப்டேட்… விஜய் ரசிகர்கள் ஹாபி அண்ணாச்சி…

- Advertisement -

அரசியலில் தீவிர கவனம் செலுத்தி இருக்கும் விஜய், திரைத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் இந்த தகவலை சொல்லும்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அது கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அந்த சமயத்திலேயே தான் ஒப்புக்கொண்ட ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக விளக்கியிருந்தார் விஜய்.

இப்படியான சூழலில்தான் அவர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். கே வி என் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு நடப்பாண்டு தொடக்கத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

அரசியலில் விஜய் தீவிர கவனம் செலுத்தி வருவதால், ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையை அடுத்த பையனூர் சூட்டிங் தளத்திலேயே நடத்தி முடித்தார்கள். கொடைக்கானலில் சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டன. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. அதுபோக மமீதா பைஜூவுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன், பாபி தியோல் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். விஜய்யின் தாயாராக ரேவதி நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் என்றும் ஆனால் அதில் அரசியல் கலந்திருக்கும் எனவும் பேசுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு விஜய் இந்த திரைப்படத்தில் தனக்கான போர்ஷன்களை முடித்து இருந்தார்.

அது மட்டுமல்ல அண்மையில் அவர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் திரைப்படத்திலிருந்து, ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதில் போலீஸ் அதிகாரி கெட்டப்பில், கையில் வாளுடன், மீசையை முறுக்கி விட்டு கம்பீரமாக காட்சியளித்தார் விஜய். அனிருத் இசையமைப்பில் அதன் பின்னணி இசையும் நன்றாக இருப்பதாக பலர் கூறினார்கள்.

இந்த நிலையில் படத்திலிருந்து சூட்டிங் மற்றும் டப்பிங் என இரண்டு பணிகளும் வெற்றிகரமாக படக்குழு முடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் சூழலில், விஜய் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் படக்குழுவினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் ஒன்பதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

சற்று முன்