- Advertisement -
Homeபொழுதுபோக்குமலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா… வரும் 4ம் தேதி 6 மணி...

மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா… வரும் 4ம் தேதி 6 மணி நேரம் டிவியில் வரப்போகுதா? போடு வெடிய… தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் புக்கித் ஜலீல் ஸ்டேடியத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் விழாவில் நடிகர் விஜய் பூஜா ஹெக்டே பிரியாமணி மமீதா பைஜூ பிரகாஷ்ராஜ் பாபி தியோல் இயக்குனர் எச் வினோத் நடிகர் நாசர், விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் ஷோ மற்றும் இயக்குனர்கள் அட்லி நெல்சன் லோகேஷ் கனகராஜ் போன்றவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த விழாவில் அனிருத் தலைமையில் இசை கச்சேரியும் நடந்தது.

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் விஜய் நடித்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் அரசியல் அழுத்தங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதனால் 2024ம் ஆண்டில் விஜய் நடித்த தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜயே நடத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் இது விஜயின் கடைசி படம் என்பதால் மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது.

எனினும் மலேசியா போலீஸ் தரப்பில் இந்த விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக நடிகர் விஜய் இந்த விழாவில் அரசியல் பேசக்கூடாது என்று மலேசியா போலீசார் தடை விதித்தனர். அத்துடன் விழா நடந்த பகுதியில் கட்சி பேனர்கள் கொடிகள் கட்சி சின்னம் பொறித்த தொப்பி ஆடைகள் அணியக்கூடாது என்றும் தடை விதித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்த காரணத்தால் தமிழ்நாட்டை சேர்ந்த சினிமா ரசிகர்கள் குறிப்பாக விஜய் ரசிகர்கள் அந்த விழாவை கண்டுகளிக்க முடியவில்லை. ஏறக்குறைய இந்த விழா 6 மணி நேரத்துக்கு மேல் நடந்த நிலையில் நேரடியாக எந்த சானலிலும் ஒளிபரப்பும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் வருகிற 4ம் தேதி மாலை 4:30 மணிக்கு ஜி5 தொலைக்காட்சியில் மலேசியாவில் நடந்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாக உள்ளது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் இந்த விழா நிகழ்ச்சி ஜி5 டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்