நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில், பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் சரத்குமார் மனைவியாக அவர் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தின் நாயகி ஜோதிகா தான். ஆனால் இதில் பயங்கரமான வில்லி கேரக்டரில் நடித்து மிரட்டியிருப்பார் நடிகை ஜோதிகா.
திருமணமான, வசதியான ஆண்களை வலை வீசி மயக்கி, காதலித்து பின் அவர்களை குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு வில்லன் ஆட்களை வரவழைத்து, அதை வைத்து பிளாக்மெயில் செய்து பல லட்சங்களை பறிப்பதுதான் இந்த படத்தில் ஜோதிகாவின் கேரக்டர். இதில் சரத்குமார் நடிப்பும், ஆண்ட்ரியா நடிப்பும் பேசும்படியாக இருந்தது.
இந்த படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே, டப்பிங் கலைஞராக பின்னணி குரல் பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா. குறிப்பாக ஆடுகளம் படத்தில் டாப்சிக்கும், வேட்டையாடு விளையாடு படத்தில் கமலினி முகர்ஜிக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரல் பேசியது ஆண்ட்ரியா தான். அதேபோல் ஆண்ட்ரியா ஒரு பின்னணி பாடகியும் கூட, ஊ சொல்றியா மாமா போன்ற பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தை தொடர்ந்து வடசென்னை, அரண்மனை 2, விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, என்றென்றும் புன்னகை உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஆண்ட்ரியா, இப்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில், லீடிங் ரோலில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, நட்சத்திர இசை விழாக்களிலும் கலந்துக்கொண்டு மேடை கச்சேரிகளில் பாடி வருகிறார்.
இப்போது ஆண்ட்ரியா நடித்துள்ள கா படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நாஞ்சில் என்பவர் டைரக்ட் செய்திருக்கிறார். இதில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, படத்தின் இயக்குனர் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.
இந்த படத்தின் இயக்குனர் நாஞ்சில், இந்த படத்தை உயிரைக்கொடுத்து எடுத்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுகள். இந்த படம் குழந்தை மாதிரி. தயாரிப்பாளர் அப்பாவாக, இயக்குனர் அம்மாவாக இருந்து இந்த குழந்தையை உருவாக்கி வளர்ந்துள்ளனர். குறிப்பிட்ட நடிகை இந்த கதையில் நடிக்காவிட்டால் வேறு நடிகையை டைரக்டர்கள் தேர்வு செய்வதுதான் வழக்கம். ஆனால் இந்த படத்துக்கு ஆண்ட்ரியா தான் எனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து, இந்த படத்தில் என்னை நடிக்க வைத்திருக்கிறார், என்று பேசியிருக்கிறார்.





