- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு வழியா விஜய் மகன் படத்தில் நடிக்கப் போகும் ஹீரோ உறுதியாகி போச்சு... மாஸான அறிவிப்புடன்...

ஒரு வழியா விஜய் மகன் படத்தில் நடிக்கப் போகும் ஹீரோ உறுதியாகி போச்சு… மாஸான அறிவிப்புடன் வந்த வீடியோ… லைக்ஸ்களை தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்…

- Advertisement -

தளபதி விஜய் தற்போது இயக்குனர் எச் வினோத் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தோடு அவர் முழுவதுமாக திரைத்துறையை விட்டு விலக முடிவு செய்துள்ளார். அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தனது இலக்கு என்று கூறி இருந்தார்.

 

இப்படியான சூழலில் தான், விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் திரைத் துறையில் அறிமுகம் ஆகிறார். ஆனால் ஹீரோவாக அல்ல இயக்குனராக அவர் களம் காண இருக்கிறார். படம் இயக்குவதில் ஏற்கனவே ஆர்வம் மிக்க அவர், இதற்காக லண்டனுக்கு சென்று படித்து வந்தார். அங்கேயே தனது நண்பர்களுடன் இணைந்து அவர் குறும்படங்களையும் இயக்கினார்.

 

ஆரம்ப காலகட்டத்திலேயே தனது மகனுக்கு திரைத்துறையின் மேல் இருக்கும் நாட்டத்தை அறிந்து கொண்டார் விஜய். வேட்டைக்காரன் திரைப்படத்தில் முதல்முறையாக தனது மகனுடன் இணைந்து அவர் ஆட்டம் போட்டார். அதில் விஜயுடன் சேர்ந்து அசத்தலான ஆட்டத்தை சஞ்சய் வெளிப்படுத்தி இருப்பார்.

 

இந்த நிலையில், தற்போது இயக்கத்தின் மீது கவனம் செலுத்தி வரும் சஞ்சய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் லைக்கா நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பிறகு இந்த அறிவிப்பு எந்த ஒரு இடத்திலும் மூவ் ஆகாமலேயே இருந்தது.

 

தனது திரைப்படத்திற்கான கதாநாயகனை தேடுவதற்கு ஜேசன் சஞ்சய் தீவிரம் காட்டி வந்தார். முதலில் அவர் விக்ரமின் மகன் துருவ்வுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பிறகு சஞ்சய், நடிகர் கவினிடம் கதை கூறியதாகவும் தகவல் வெளியானது. இதைக் கவினே ஒப்புக்கொண்டார். ஆனால் கால் சீட் பிரச்சினை காரணமாக, அவர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறியிருந்தார்.

 

இப்படியான சூழலில் ஜேசன் சஞ்சய் படத்தில் நாயகனாக இணைந்திருக்கிறார் நடிகர் சந்தீப் கிஷன். இது தொடர்பான அறிவிப்பை லைக்கா நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதில் படத்திற்கு தமன் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபனிங் வீடியோவில் இசை நன்றாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சற்று முன்