- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் டிஜிபியின் மகள்... இதில் ஹீரோவாக நடிக்கப் போவது யார்...

பிரபல இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் டிஜிபியின் மகள்… இதில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா?…

- Advertisement -

2023 ஆம் ஆண்டில் விஜய் அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியானாலும், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கவனத்தை ஈர்த்தன. அதிலும், குட் நைட், அயோத்தி, போர் தொழில், பார்க்கிங் உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றன. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படங்கள் சக்கை போடு போட்டன.

இதில் முக்கிய இடத்தை பிடித்த திரைப்படம் டாடா. சின்னத்திரை சீரியலில் நடித்து வந்த கவின், இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்கு முன் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதன் பிறகு, லிப்ட் திரைப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கவின் கதாநாயகனாக நடித்த அந்த திரைப்படம், ஓரளவு விமர்சனத்தை பெற்றது.

இதை எடுத்து, கவின் டாடா திரைப்படத்தில் நடித்தார். படத்தில் ஹீரோயினாக அபர்ணா நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் வழக்கமான கதை தான் என்றாலும், அதை எடுத்துக் கூறிய விதத்தில் பாராட்டை பெற்றது டாடா திரைப்படம். கல்லூரியில் காதலித்த ஜோடி, திருமணமும் செய்ய குழந்தை பிறந்த நேரத்தில் ஹீரோயின், கதாநாயகனை பிரிந்து செல்கிறார். இதன்பிறகு தனது குழந்தையை ஹீரோ எப்படி பார்த்துக் கொண்டார் இருவரும் எப்படி இணைந்து கொண்டார்கள் என்பதுதான் படத்தின் கதை.

தனது இரண்டாவது திரைப்படத்திலேயே மிக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி சபாஷ் போட வைத்திருந்தார் கவின். படத்தின் பாடல்களும் ஹிட் அடித்தன. இந்த திரைப்படத்தை கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியிருந்தார். டாடா திரைப்படம் கொடுத்த வெற்றியால், அவரை அடுத்த படத்திற்கு புக் செய்தது லைக்கா நிறுவனம். இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அறிவிப்போடு, அது நின்றுவிட்டது என்று தான் கூற வேண்டும். இதன்பிறகு கதை அடுத்த கட்டத்தில் நகரவே இல்லாமல் இருப்பதாக சினிமா விமர்சனங்கள் கூறி வந்தனர். இந்தப் பக்கம் நடிகர் துருவ்வும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவர் கபடி வீரராக நடிக்க வேண்டும் என்பதால், அந்த விளையாட்டில் முழு மூச்சில் இறங்கி இருக்கிறார் துருவ்.

இப்படியான சூழலில் இயக்குனர் கணேஷ் கே பாபு, துருவ் படத்தை ஒதுக்கி வைத்து விட்டு அடுத்ததாக ஒரு நகைச்சுவை படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனாக ஜீவா நடிக்க இருக்கிறாராம். அதேபோல் கதாநாயகியாக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இசையில் கவனம் செலுத்தி வரும், தவ்தி ஜிவால் ஏற்கனவே அது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்