அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜவான். ஷாருக்கான், நயன் தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படத்தின் ஷூட்டிங் சில பிரச்னைகளால் தாமதமானது. ஒருவழியாக பிரச்னைகள் முடிந்து ஷூட்டிங்கும் நிறைவடைந்துவிட்டது. படத்தை ஷாருக்கானே தயாரித்திருக்கிறார்.
படமானது செப்டம்பர் 7ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான பதான் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. எனவே அதே வெற்றி ஜவானிலும் தொடரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஷாருககனின் ரசிகர்கள். அதேபோல் அட்லீயும் இந்தப் படத்தை ஹிட் கொடுத்துவிட்டால் பாலிவுட்டில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம் என்ற கணக்கில் இருக்கிறார்.
படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று முன் தினம் சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடந்தது. தமிழ்நாட்டில் ஜவானின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்ட்டை நடத்தியதன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் முழு கவனமும் தற்போது ஜவான் மீது திரும்பியிருக்கிறது. மேலும் தமிழ்நாட்டு ஆடியன்ஸை கவர் செய்யும் நோக்கத்தில்தான் ஈவெண்ட் இங்கு நடத்தப்பட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேருக்கு நடத்தாமல் ஷாருக்கானும் முழு ஈடுபாட்டோடு இதில் கலந்துகொண்டார். அனிருத்துடன் நடனம், ஜாலியான ஸ்பீச், தமிழ்நாட்டை புகழ்ந்த பேச்சு என ஷாருக்கான் முழுக்க முழுக்க எஞ்சாய் செய்தார். ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் முடிந்த கையோடு நேற்று காலை ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவை கொடுத்திருக்கின்றனர்.
The cheer of the crowd is the testament of the storm that #Jawan is going to be! Right from the Burj Khalifa #ShahRukhKhan #Jawan #JawanInDubai #JawanCelebrationAtBurjKhalifa pic.twitter.com/cjIRNF1nmn
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) August 31, 2023
அதுமட்டும்ன்றி ஷாருக்கான் ஜவானாக இருந்து பிறகு சில பிரச்னைகளால் நெகட்டிவ் ஷேடாக மாறுவது ட்ரெய்லரை பார்க்கும்போது உறுதியாவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் துபாயில் இருக்கும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஜவான் படத்தின் ட்ரெய்லர் ஒளிபரபரப்பப்பட்டது. அதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ரசிகர்களும் இதனால் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.





