- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து பிளாப் படங்களால் நொந்து போன ஜெயம் ரவி, அண்ணனும் கை விட்டதால் அப்செட் -...

தொடர்ந்து பிளாப் படங்களால் நொந்து போன ஜெயம் ரவி, அண்ணனும் கை விட்டதால் அப்செட் – போடு வெடிய, அடுத்து அவர் நடிப்பது இந்த டைரக்டர் படத்திலா?

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான இளம் நடிகர்களில் ஒருவராக தான் இப்போதும் இருக்கிறார். அவர் அறிமுகமான ஜெயம் படத்தில், அப்பாவி கல்லூரி மாணவராக அவரது நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்து அவர் நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக அசத்தியிருந்தார்.

ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், அடங்க மறு, சந்தோஷ் சுப்ரமணியம், வனமகன், உனக்கும் எனக்கும், பேராண்மை, தனி ஒருவன், போகன், பூலோகம் உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு, குறையே சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக காட்டுவாசியாக வனமகன் படத்தில், வேற லெவலில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. நல்ல கேரக்டர்கள், சிறந்த கதைகள் தொடர்ந்து அமையாத பட்சத்தில், எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், தோல்வியை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் இறைவன், அகிலன், சைரன் என தொடர் தோல்வி படங்களால் துவண்டு போயிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

- Advertisement -

இந்த சூழலில், தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க ஜெயம் ரவி முன்வந்த நிலையில் படத்தின் பட்ஜெட்டை ரூ. 120 கோடி என நிர்ணயித்து, அந்த படத்தையே கிடப்பில் போடச் செய்துவிட்டார் அவரது அண்ணன் டைரக்டர் மோகன் ராஜா. அதே நேரத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி படமும், தமிழில் அஜீத்குமார் படமும் இயக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் தனி ஒருவன் 2 படம் கைவிட்டு போனதால், அவருக்கு சிறிதும் கவலை இல்லை. ஆனால் ஜெயம் ரவிதான் அப்செட்டில் இருக்கிறார்.

இந்நிலையில், எப்படியாவது அடுத்தடுத்த ஹிட் படங்களை தர வேண்டும் என்ற முனைப்பில் ஜெயம் ரவி இருக்கிறார். ஜெயம் ரவியும், நித்யா மேனனும் நடித்துள்ள கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை, படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் இது கதாநாயகியை மையப்படுத்திய படம் என்பதால், ஜெயம் ரவிக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை.

- Advertisement -

இயக்குனர் பாண்டிராஜ், எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை இயக்கிய நிலையில், சூர்யா நடித்த அந்த படம் பிளாப் ஆனது. அதற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை பாண்டிராஜ் இயக்க, பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், அதில் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜை சந்தித்து ஜெயம் ரவி கதை கேட்டுள்ளார். கதை மிகவும் பிடித்துப் போனதால், அவரது இயக்கத்தில் நடிப்பது உறுதி செய்யபட்டது. ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். கடைக்குட்டி சிங்கம் போன்ற ஒரு வெற்றிப் படத்தை ஜெயம் ரவிக்கு கொடுத்து, அவரது திரை பயணத்தில் பாண்டிராஜ் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவாரா, எ்ன்று தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்