- Advertisement -
Homeபொழுதுபோக்குயோகிபாபுக்கு 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து சம்மதம் வாங்கி விட்டேன் - சைரன் பிளாப் ஆனதால்...

யோகிபாபுக்கு 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து சம்மதம் வாங்கி விட்டேன் – சைரன் பிளாப் ஆனதால் ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி, தமிழில் நல்ல படங்களை கொடுத்தவர். அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் ஒரு காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் டீன் ஏஜ் வயதினர் மட்டுமின்றி குடும்பமாக பார்க்கவும் ஆடியன்ஸ் தியேட்டர்களில் திரண்டனர். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பேமிலி சப்ஜெக்ட் படங்கள் நன்றாக அவருக்கு அமைந்தன.

அதே போல் தனி ஒருவன், போகன், தீபாவளி போன்ற படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி படங்கள் என்றாலே, ரசிகர்கள் அலட்சியமாக பார்க்கும் அளவுக்கு தொடர்ந்து அவர் தோல்வி நாயகனாக மாறிவிட்டார். அகிலன், இறைவன் வரிசையில் சைரன் படமும் பிளாப் ஆனதால், ஜெயம் ரவி முக்கிய அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, இயக்குநராக இருந்து வருகிறார். ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தனி ஒருவன், போகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் அவர்தான். அதில் மிகப்பெரிய மாஸ் படமான தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க, கால்ஷீட் தராமல் நேரத்தை வீணாக்கி வருகிறார் ஜெயம் ரவி.

அண்ணன் படத்தில் நடிக்க கால்ஷீட் தராமல் இறைவன், அகிலன், சைரன் போன்ற மொக்கை கதை படங்களுக்கு தேதி தந்த, காலத்தை விரயமாக்கி, தோல்வி படங்களின் தொடர் நாயகனாகவும் ஜெயம் ரவி பெயர் வாங்கி இருக்கிறார். இது போதாது என்று இப்போது புதிதாக இயக்குநர் அவதாரம் எடுக்கவும் ஜெயம் ரவி முடிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் ஜெயம் ரவி கூறியதாவது, நான் 3 ஸ்கிரிப்ட்களை எழுதி வைத்திருக்கிறேன். அதில் ஒரு கதையை நடிகர் யோகிபாபுவை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக அவரிடம் பேசி கையில் இருந்த 500 ரூபாயை கொடுத்து அவரை புக் செய்துவிட்டேன்.

மற்றொரு கதையில், நான் மட்டுமே நடிக்க முடியும். ஏனென்றால் அந்த கதை நான் நடிக்கும் விதமான ஜானரில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அந்த ஸ்கிரிப்ட்டில் என்னை தவிர யாரும் நடிக்க முடியாது. 3வது ஸ்கிரிப்ட்டில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். அதில் நானும் நடிக்கலாம். அப்படி பொதுவான ஒரு கதையாக அதை உருவாக்கி உள்ளேன், என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்