தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். மேலும் விவாகரத்து கேட்டு, அவரது பிறந்த நாளில் குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கலும் செய்திருந்தார். இது தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்திலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் என்னிடம் எதுவுமே கூறாமல் இப்படி செய்து விட்டார் என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் ஜெயம் ரவி, நான் ஏற்கனவே அவருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பிவிட்டுதான் விவகாரத்து கேட்டு மனுதாக்கல் செய்தேன். ஆனால் எனக்கு எதுவுமே தெரியாது என அவர் சொல்கிறார். என் பிள்ளைகளின் நலன் கருதி நான் எதையும் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். நீதிமன்ற விசாரணையில் உண்மைகள் வெளியே வரும் என்று ஜெயம் ரவி கூறியிருந்தார்.
இதற்கிடையே பாடகி ஒருவருடன் ஜெயம் ரவி கொண்டுள்ள நெருக்கமான நட்பின் காரணமாகதான், தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. கெனிஷா என்ற பாடகியுடன் ஜெயம் ரவி நெருங்கிய பழக்கம் கொண்டிருப்பதால், தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. கெனிஷாவுடன் தொடர்பில் இருப்பதால் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகர் ஜெயம் ரவி, நான் ஒன்றே ஒன்றைத்தான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதில் யாரையும் இழுக்காதீர்கள். வாழு வாழ விடு. ஜெனிஷா 600 மேடைகளில் பாடியுள்ளார். தனியாக நின்று வளர்ந்தவர். பல உயிர்களை காப்பாற்றிய, குணப்படுத்திய ஹீலர். சான்றிதழ் பெற்ற உளவியலாளர். அவரை இப்படி இழுக்காதீர்கள்.
நானும் கெனிஷாவும் இணைந்து வருங்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர், நோய்களை குணப்படுத்தும் மையம் அமைக்க இருக்கிறோம். பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதை கெடுக்காதீர்கள். அதை யாரும் கெடுக்கவும் முடியாது. தேவையில்லாமல் கெனிஷாவை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள் என்று நடிகர் ஜெயம் ரவி கோபமாக பேசி இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி, கெனிஷாவுடன் இணைந்து ஹீலர் சென்டர் நடத்த திட்டமிட்டு இருப்பதன் மூலம், அவர்களது நெருக்கமான பழக்கம் உறுதியாகிறது. அதே நேரத்தில் குஷ்பு வெளியிட்ட பதிவும், ஜெயம் ரவி சார்ந்ததுதான் என்பதும் உண்மையாகிறது. பாடகி கெனிஷாவின் நட்பு காரணமாகவே, ஜெயம் ரவி விவாகரத்து முடிவுக்கு வந்திருப்பதாக தமிழ் சினிமா ரசிகர்கள் பேசத் துவங்கியுள்ளனர்.





