- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் படத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியேற முக்கிய காரணம் அந்த நடிகர்தான், வெளிச்சத்துக்கு...

மணிரத்னம் படத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியேற முக்கிய காரணம் அந்த நடிகர்தான், வெளிச்சத்துக்கு வந்த உண்மை – என்ன மச்சி சொல்றீங்க?

- Advertisement -

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில், அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. அதாவது ராஜராஜ சோழன் கேரக்டரிலேயே அவருக்கு நடிக்க வாய்ப்பளித்து இருந்தார் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படத்தில் 2 பாகங்களிலுமே சற்று ரசிக்க கூடிய வகையில் சிறந்த நடிப்பை தந்திருந்தது ஜெயம் ரவி மட்டும்தான். சியான் விக்ரம் நடிப்பு கூட இந்த படத்தில் ரசிகர்களுக்கு அவ்வளவு திருப்தி தரவில்லை.

இதையடுத்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படமான தக்லைப் படத்தில் ஜெயம் ரவி முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் செய்யப்பட்டார். இயக்குனர் மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு என்பது மட்டுமின்றி, நடிகர் கமல்ஹாசன் என்னும் உலகநாயகன் தனது மானசீக குருவுடன் நடிக்கும் வாய்ப்பு என, சந்தோஷமாக ஒப்புக்கொண்டார் ஜெயம் ரவி. ஆனால் அவருக்கான கேரக்டர், சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால், தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடிப்பதாக இருந்த தனி ஒருவன் 2 படப்பிடிப்பையும் தள்ளி வைத்து விட்டார் ஜெயம் ரவி. ஏனெனில் தக்லைப் படத்தில் நடிப்பதை பெரிய அளவில் எதிர்பார்த்தார் ஜெயம் ரவி. இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், திரிஷா, அபிராமி போன்றவர்களும் நடிக்க கமிட் ஆகியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென தக்லைப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் வெளியேறினார். பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், மணிரத்னம் தக்லைப் படத்தில் நடிப்பதற்கான தேதிகள் ஒதுக்கி தரவில்லை. தனக்கான கேரக்டர் குறித்தும், சம்பளம் குறித்தும் எதுவுமே பேசவில்லை என்ற நிலையில், அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவரது கேரக்டரில் நடிகர் சிலம்பரசன் நடிக்க உள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே திடீரென நடிகர் ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இரண்டுமுறை 30 நாட்கள், 30 நாட்கள் என மணிரத்னம் படத்தில் நடிக்க ஜெயம் ரவி, கால்ஷீட் ஒதுக்கித் தந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்த 30 நாட்கள் வேண்டாம் என இரண்டுமுறை கேன்சல் செய்து, 60 நாட்களை வீணாக்கியுள்ளார் மணிரத்னம், இதனால் கடுப்பான ஜெயம் ரவி வெளியேறி விட்டதாக கூறப்பட்டது. இதுவும் ஒரு உண்மைதான் என்றாலும், மற்றொரு முக்கிய காரணமும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது நடிகர் சிலம்பரசன், துல்கர் சல்மான் கேரக்டரில் நடிக்கிறார் என்றவுடனே, ஜெயம் ரவி குழப்பமாகி விட்டாராம். அதன் பிறகுதான் தக்லைப் படத்தில் இருந்து விலகும் முடிவை உறுதியாக எடுத்திருக்கிறார். இதே போன்ற ஒரு பிரச்னை, பொன்னியின் செல்வன் படத்தின் போதும் ஏற்பட்டது. அந்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தால், ஜெயம்ரவி நடிக்கவில்லை என்று கூறியதாக தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை அறிந்து சிம்புவே தன்னை அழைத்து, மச்சி, இதெல்லாம் அவங்களா கிளப்பி விடுவாங்க, கண்டுக்காதே மச்சி எனக் கூறியதாக, ஜெயம் ரவியே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஆனால் அது பொய்யல்ல, உண்மைதான் என்பது இப்போது உறுதியாகி விட்டது.

- Advertisement -

சற்று முன்