சில நடிகர்கள், அழகாக இருக்கிறார்கள். நல்ல உடல் தோற்றம் இருக்கிறது. பாடல், சண்டை, நடனம், காமெடி. காதல், பாசம் என அனைத்துவிதமான நடிப்பிலும் வெளுத்து வாங்குவர். ஆனால், அவர்கள் படம் ரிலீஸ் ஆன சில தினங்களிலேயே தியேட்டரை விட்டு மாயமாகி விடும். அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் மாஜி ஹீரோ பிரசாந்த். ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்களில் அசத்திய பிரசாந்த், பிறகு தமிழ் சினிமாவிலேயே காணவில்லை.இப்போது மீண்டும் விஜய் 68 படத்தில் ரீ என்ட்ரி தருகிறார்.
அதே போல், இப்போது நடிப்பில், அழகில், திறமையில் சிறந்த ஒரு நடிகராக தான் இருக்கிறார் ஜெயம் ரவி. ஆனால், அவருக்கும் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வெற்றி இல்லை. ஜெயம் படத்தில் அறிமுகமான அவருக்கு, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், போகன், அடங்க மறு, நிமிர்ந்து நில், கோமாளி போன்ற சில படங்கள் மட்டுமே பெரிய வெற்றியை கொடுத்தன. அதற்கு பிறகு, பெரிய அளவில் பேசப்படவில்லை.
பொன்னியின் செல்வன் மெகா ஹிட் படம் என்றாலும் அதில் சியான் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த நிலையில், அந்த படத்தின் வெற்றியை ஜெயம் ரவி, தனது சொந்த வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியாது. பிரதீப் ரங்கராஜன் இயக்கிய கோமாளி படத்தை தொடர்ந்து எந்த படமும், ஜெயம் ரவி பெயரை சொல்லவில்லை என்பதே கசப்பான உண்மை.
பூமி, மிருதன், பூலோகம், அகிலன் சமீபத்தில் வெளிவந்த இறைவன் படம் வரை, அனைத்துமே செம மொக்கை வாங்கிய படங்களாக அவருக்கு அமைந்துவிட்டன. தொடர்ந்து படங்கள் தோல்வியடைந்த நிலையில், ஜெயம் ரவி பெரிதாக எதிர்பார்த்த படம்தான் இறைவன். நயன்தாரா ஜோடியாக நடித்து, அகமது இயக்கிய இந்த படம், தியேட்டர்களில் காற்று வாங்குகிறது. பாடல்கள், படத்தின் காட்சியமைப்பு, திரைக்கதை என எல்லாமே சொதப்புவதால் ரசிகர்கள், இறைவன் படத்தை கடுமையான சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், என்னிடம் படத்தின் கதையை டைரக்டர் சொல்லும்போது
மிக பிரமாதமாக இருக்கிறது. ஆனால், அதை படமாக எடுக்கும்போது ஏமாற்றி விடுகின்றனர். கதையில் சொல்லும்போது காட்டும் விஷூவலை, நிஜத்தில் படத்தில் காட்டுவதில்லை. இதனால்தான், ரசிகர்களுக்கு படம் பலத்த ஏமாற்றம் தருகிறது. கதை சொல்லும் அளவுக்கு படத்தை எடுக்க இயக்குநர்களுக்கு தெரியவில்லை என்று புலம்பி வரும் ஜெயம் ரவி, கதை சொல்ற மாதிரியே, படம் எடுக்கற டைரக்டர் யாராவது இருந்தா நேர்ல வாங்கப்பா, என அழைப்பு விடுத்துள்ளாராம்.
இதற்கிடையே அடங்க மறு என்ற படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல், மீண்டும் ஜெயம் ரவியை வைத்து படம் எடுக்க அவரிடம் கதை சொல்லி இருக்கிறார். ஆனால், படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால், சின்ன பட்ஜெட் கதையாக சொல்லுங்கள் என அவரிடம் கூறப்பட்டு இருக்கிறது. இதற்காக சின்ன பட்ஜெட்டில் கதையை தயார் செய்து வருகிறார் அடங்கமறு படத்தின் இயக்குநர். இந்த படமாவது, ஜெயம் ரவிக்கு, ஜெயத்தை கொடுக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.





