நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களால் ஒருவராக இருந்து வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களையே தந்து வருகிறார். டைரக்டர் என்னிடம் கதை சொல்லும்போது நல்லா இருக்குது, ஆனா படமா வந்த பிறகு அந்த படம் வேற மாதிரி இருக்குது என்று நேரடியாகவே சொல்லியிருந்தார்.
கடந்த ஆண்டில் அவர் அதிகம் எதிர்பார்த்த படங்கள் அகிலன், இறைவன் ஆகிய 2 படங்களுமே செம பிளாப் ஆகி விட்டன. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் சிறப்பாக இருந்தும், 2ம் பாகம் எதிர்பார்த்த அளவில் இல்லை. குறிப்பாக கிளைமாக்ஸ் சொதப்பல் ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது.
இப்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் படமும் ரசிகர்களை பாடாய்படுத்தி விட்டது. இரட்டை ரோலில் நடித்தால் மட்டும் ஜெயம் ரவி படம் ஓடிவிடுமா, இதுபோன்ற உப்புமா கதைகளில் எல்லாம் ஏன் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் படம் இப்போது பார்த்தாலும் அதிகமாக ரசிக்க முடியும். அந்தளவுக்கு அந்த படம் மாஸ்ஹிட் படமாக இருந்தது. அந்த படத்தில் நடிக்க பல ஆண்டுகளாக கால்ஷீட் கேட்டு வரும் அண்ணன் ராஜா மோகனுக்கு டிமிக்கி கொடுக்கும் ஜெயம் ரவி, இப்படி மொக்கை படங்களில் நடிக்க கால்ஷீட் தந்து நேரத்தை வீணாக்கி வருகிறார்.
இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜெயம் ரவி, விரைவில் இயக்குநராக இருப்பதாகவும் 3 கதைகள் ஸ்கிரிப்ட் ரெடியாக இருப்பதாகவும் அதில் ஒரு கதையில் நானே நடிக்கிறேன், என்றார். மேலும் மற்றொரு கதையில் நடிக்க யோகிபாபுவுக்கு ரூ. 500 கொடுத்து புக் செய்துவிட்டதாகவும், மற்றொரு கதையில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
இதுதான் இப்போது பெரிய பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது. பல கோடி சம்பளம் வாங்கும் யோகிபாபுக்கு ரூ. 500 அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துவிட்டேன் என்று ஜெயம் ரவி பொதுவெளியில் கூறியது, யோகிபாபுவை அவமதிக்கும் ஒரு செயல், காமெடியனாக இளக்காரமாக நினைத்து இப்படி சொல்லி இருக்கிறார். இதுவே மற்ற நடிகர்கள் எனில், இப்படி ஜெயம் ரவி சொல்லியிருப்பாரா, என ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





