- Advertisement -
Homeபொழுதுபோக்குகடுமையான வறட்சியில் தவிக்குது தமிழ் சினிமா, கதை மற்றும் டைட்டில் பஞ்சத்தை விட இது பெரிய...

கடுமையான வறட்சியில் தவிக்குது தமிழ் சினிமா, கதை மற்றும் டைட்டில் பஞ்சத்தை விட இது பெரிய கொடுமையா இருக்குதே? – புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

சினிமா என்பதன் அர்த்தமே பொழுதுபோக்கு என்பதுதான். கலை வடிவில் உருவான சினிமாவில் காதல் காமெடி ஆக்சன் குடும்பம் சென்டிமென்ட் இசை பாடல்கள் என பல விஷயங்கள் கலந்திருக்கின்றன. ஒரு படம் என்பது இது எல்லாமே ஒரு கலவையாக தான் உருவாக்கப்பட வேண்டும். மனித வாழ்க்கையை போலவே நவரசங்களும் கலந்ததுதான் சினிமாவும்.

ஆரம்பத்தில் இருந்தே படத்தில் நாயகன் நாயகி எவ்வளவு முக்கியமோ அதுபோல் படத்தில் காமெடி நடிகரும் மிக முக்கியமான ஒரு கேரக்டராக இருந்தார். கருப்பு வெள்ளை படங்கள் காலத்தில் நடிகர்கள் நாகேஷ் டணால் தங்கவேலு சந்திரபாபு தேங்காய் சீனிவாசன் சோ ராமசாமி என்னத்தே கண்ணையா எம்ஆர்ஆர் வாசு குலதெய்வம் ராஜகோபால் என பலரும் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.

- Advertisement -

அதன்பிறகு 1980 90களில் சுருளிராஜன் கவுண்டமணி செந்தில் எஸ்வி சேகர் ஒய்ஜி மகேந்திரன் பிந்துகோஷ் உசிலைமணி கல்லாப்பட்டி சிங்காரம் மண்ணாங்கட்டி சுப்ரமணியம் என பலரும் காமெடி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தனர். இதில் கவுண்டமணி செந்தில் ஜோடி செய்த காமெடி அலப்பரை தமிழ் சினிமாவில் நகைச்சுவை பொற்காலமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. இதில் கே பாக்யராஜ் பாண்டியராஜன் விசு விசு சேகர் போன்ற இயக்குனர்கள் காமெடி கலந்த படங்களை அதிகளவில் ரசிகர்களுக்கு தந்தனர்.

அதன்பிறகு நடிகர்கள் வடிவேலு விவேக் காமெடி நடிகர்களாக தமிழ் சினிமாவில் காலடி வைத்தனர். கருத்துகளை சொல்லி காமெடி செய்த சின்ன கலைவாணர் விவேக், உடல் மொழியாலும் டயலாக் டெலிவரியிலும் ரசிகர்களை தன்வசப்படுத்திய வைகைப்புயல் வடிவேலு இருவரும் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டனர். அதிலும் வடிவேலு காமெடியில் அதகளம் செய்தார்.

- Advertisement -

அதன்பிறகு தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக அறிமுகமான சந்தானம் சூரி யோகிபாபு சதீஷ் கருணாகரன் மொட்டை ராஜேந்திரன் தம்பி ராமையா ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களின் காமெடி பல படங்களில் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது. ஆனால் இது எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் என்ற நிலையில் காமெடி நடிகர்கள் அனைவருமே ஒரு கட்டத்தில் ஹீரோக்களாகி மாறி விட்டனர். யாருமே காமெடி நடிகராக சினிமா பயணத்தை துவங்க விரும்புவதில்லை.

இப்போதைய சூழலில் யோகிபாபு ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களின் காமெடி என்ற பெயரில் செய்யும் அபத்தங்களை பார்த்தால், ரசிகர்களுக்கு நேரடியாக கிச்சு கிச்சு மூட்டினால் கூட சிரிப்பு வர வாய்ப்பில்லை. கதைக்கு பஞ்சம் டைட்டிலுக்கு பஞ்சம் என்பதை விட தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் கடும் வறட்சியாக நீடிக்கிறது. அதனால் படம் பார்க்க செல்லும் ரசிகர்கள், மனம் விட்டு சிரிக்க ஒரு காமெடி சீனும் படத்தில் இல்லையே என்ற ஆதங்கத்துடன்தான் தியேட்டரை விட்டு வெளியேறும் அவலம் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்