- Advertisement -
Homeபொழுதுபோக்குசுதா கொங்கராவுடன் நான் இணைந்திருக்கும் திரைப்படம் இப்படி தான் இருக்கும்... முதல்முறையாக மனம் விட்டு பேசிய...

சுதா கொங்கராவுடன் நான் இணைந்திருக்கும் திரைப்படம் இப்படி தான் இருக்கும்… முதல்முறையாக மனம் விட்டு பேசிய ஜெயம் ரவி…

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவிக்கு சமீப காலமாக நடித்த திரைப்படங்கள் பலவும் தோல்வியை சந்தித்து வருகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த அகிலன் படம் இங்கு வந்ததே பலருக்கும் தெரியாது. பிறகு இறைவன் என்னும் திரைப்படத்தில் நடித்தார் அதுவும் சரியாக போகவில்லை.

 

இதையடுத்து சைரன் என்னும் திரைப்படம் அவருக்கு வந்தது. ஆனால் ஜெயம் ரவிக்கு அந்த திரைப்படமும் சுமாரான விமர்சனத்தையே கொடுத்தது. இந்த நிலையில் கடந்த தீபாவளிக்கு, ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்படம் வெளியானது. சிவா மனசுல சக்தி பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு கல் ஒரு கண்ணாடி என மூன்றே மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்து பின்னர் சறுக்கிய ராஜேஷ் இந்த திரைப்படத்திலாவது வெற்றியை கொடுப்பாரா என்று பலரும் எதிர்பார்த்தனர்.

 

ஆனால் பிரதர் திரைப்படமும் தோல்வியை தான் சந்தித்தது. இப்படி தொடர்ச்சியாக நான்கு படங்கள் ஜெயம் ரவிக்கு சறுக்களை கொடுத்துள்ளன. இப்படியான சூழலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜெயம் ரவி நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகிறது. இதனை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.

 

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது அதன் டைட்டிலை பார்க்கும்போதே தெரிகிறது. இதன் ட்ரெய்லரும் சற்று சுவாரசியமாகவே இருந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி ஜீனி என்னும் படத்தில் நடித்திருக்கிறார். அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் வரும் மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுபோக டாடா பட இயக்குனருடனும் கைகோர்த்துள்ளார் ஜெயம் ரவி. வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. அதில் காதலும் இருப்பதாக கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சுதா கொங்கராவுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் திரைப்படமும் பலரது பார்வைக்கு சென்றுள்ளது. இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் இடம்பெற்று இருந்தாலும், ஜெயம் ரவி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அது குறித்து பேசப்பட்டு வருகிறது.

 

இந்த திரைப்படத்தில் நான் சிவகார்த்திகேயன் அதர்வா உள்ளிட்டோர் நடிக்கிறோம். என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த திரைப்படத்தின் மீது நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன். இது நிச்சயம் புதியதாக இருக்கும். ஆனால் இது எப்படி வரும் என்பதே எனக்கு தெரியாது. ஏனென்றால் நான் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த மாதத்தில் தான் நான் படப்பிடிப்பில் இணைய இருக்கிறேன் என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.

 

சற்று முன்