தமிழ் சினிமாவுக்கு வரும் மலையாள நடிகைகளுக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்கள் அமோக ஆதரவும் வரவேற்பும் அளிப்பது அம்பிகா, ராதா காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இயல்பிலேயே அவர்களது லட்சணமான முகமும், கிறங்கடிக்கும் கண்களும், வாளிப்பான தேகமும், நடிப்புத் திறனும் ரசிகர்களை வசீகரித்து விடுகின்றன.
தொடர்ந்து மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன், மஞ்சு வாரியார், சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், அசின், நயன்தாரா, ஊர்வசி என பல நடிகைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி வந்த அனைவருமே தமிழ் சினிமாவில் தங்களது இருப்பை நிலைநாட்டிச் சென்றவர்களாகவே இருக்கின்றனர்.
அந்த வகையில், சமீபத்திய வரவுதான் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மாவும் தமிழ் சினிமாக்களில் நடித்தவர்தான். நெற்றிக்கண் படத்தில் ஒரு ரஜினிக்கு லட்சுமி, ஒரு ரஜினிக்கு அவர்தான் ஜோடி. அதே போல், பல ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
பைரவா, ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறிப் போனார். ஆனால் தொடர்ந்து படவாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் சென்றார்.
தமிழில் வேதாளம் படத்தில் அஜீத், லட்சுமிமேனன் நடித்த கேரக்டரில் தெலுங்கில் சிரஞ்சீவியுடன், லட்சுமிமேனன் நடித்த தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் போலோ சங்கர் என்ற ரீமேக் படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், வெப் சீரிஸ்சில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
இதையடுத்து ஏ படங்கள், ஆடையில்லாமல் சில படங்களில் நடித்த ராதிகா ஆப்தே நடிக்கும் ஒரு வெப்சீரிஸ்சில் அவருடன் நடிக்க உள்ளார். பல சர்ச்சைகளில் சிக்கிய ராதிகா ஆப்தே, ரஜினி நடித்த கபாலி படத்தில் நடித்தவர்தான். எனினும் வெப் சீரிஸ்க்கு சென்சார் கட்டுப்பாடு இல்லாததால், ஆபாச நாயகி நடிக்கும் இந்த வெப்சீரிஸ்சில் நடிக்க வேண்டாம் என சிலர் சொல்லியும், கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது அவரது சினிமா கேரியரை பாதிக்குமோ என அவரது ரசிகர்கள் அச்சப்படுகின்றனர்.





