- Advertisement -
Homeபொழுதுபோக்குசார் நான் உங்களை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன்... பிரபல நடிகரிடம் மேடையிலேயே கோரிக்கை வைத்த...

சார் நான் உங்களை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன்… பிரபல நடிகரிடம் மேடையிலேயே கோரிக்கை வைத்த ஜெயம் ரவி…

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம், வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மனாக நடித்த ஜெயம் ரவி, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருந்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். மன்னர்களுக்கே உண்டான மெடுக்கான தோற்றமும், உடல் மொழியிலும் கலக்கி இருந்தார் ஜெயம் ரவி.

இது திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், சைரன் படத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் இந்த திரைப்படத்தில், ஜெயம் ரவிக்கு இரட்டை கதாபாத்திரங்களாம். ஒன்று, சிறை கைதி வேடம். மற்றொன்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேடம்.

- Advertisement -

இதில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்க, மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனும் இடம்பெற்றுள்ளார். இதுபோக சிவா மனசுல சக்தி பாஸ் என்ற பாஸ்கரன் படங்களின் இயக்குனர் ராஜேஷ் உடனும் ஜெயம் ரவி பணியாற்றி இருக்கிறார். அக்கா தம்பி உறவை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.

வழக்கமான தனது காமெடியில் இருந்து சற்று விலகி இருக்கும் ராஜேஷ், உணர்வுபூர்வமாக இந்த திரைப்படத்தை எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு பிரதர் என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இதுபோக ஜீனி, கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் கமல் இணையும் திரைப்படத்தில் முக்கிய வேடம் என பிசியாக இருக்கிறார் ஜெயம் ரவி.

- Advertisement -

அவரின் இறைவன் திரைப்படம், வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதால் இதன் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்க, கிரைம் திரில்லர் ஜானரில் படம் உருவாகியுள்ளது. வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் திரைப்படங்களை இயக்கிய அகமது இந்த படத்தை எடுத்துள்ளார்.

இதற்கான நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், போகன் திரைப்படத்தில் அரவிந்த்சாமிக்கன கதாபாத்திரம் முதலில் எனக்குத்தான் வந்தது. ஆனால் கால் சீட் பிரச்சினையால் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று தெரிவித்தார். அப்போது மேடையில் இருந்த ஜெயம் ரவி, சார் நான் எப்போதெல்லாம் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்போதெல்லாம் முதலில் நீங்கள் மட்டும்தான் நினைவுக்கு வருவீர்கள். நான் உங்களை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க ஆசைப்படுகிறேன். எதிர்காலத்தில் அதற்கான கால்சீட்டை தயவு செய்து தாருங்கள் என்று தெரிவித்தார். ஒரே மேடையில் இரு நடிகர்கள் கலந்துரையாடியது அந்த இடத்தை கலகலப்பாகியது.

- Advertisement -

சற்று முன்