- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு படத்தை மட்டுமே மலையாக நம்பியிருக்கும் ஜெயம் ரவி, ஆனால் இது கதாநாயகியை மையப்படுத்திய கதையாமே?...

ஒரு படத்தை மட்டுமே மலையாக நம்பியிருக்கும் ஜெயம் ரவி, ஆனால் இது கதாநாயகியை மையப்படுத்திய கதையாமே? – கிருத்திகா மனசு வைப்பாரா?

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக பல வெற்றிப் படங்களை தந்தவர். நல்ல நடிகர். படத்தில் வரும் தனது கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொள்ள தயங்காதவர். நடிப்பில் பல நல்ல பரிமானங்களை காட்டக் கூடியவர். அப்பாவியாகவும் அசத்துவார். அதிரடி ஆக்சன் நாயகனாகவும் ஜெயம் ரவி கலக்குவார்.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், எனக்கும் உனக்கும், தீபாவளி, சகலகலா வல்லவன் போன்ற ஜாலியான காதல் படங்களில் நடித்த ஜெயம் ரவி வனமகன், பேராண்மை போன்ற படங்களில் மிக வித்யாசமான நடிப்பில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். வாய் பேசாத காட்டுவாசியாக வனமகன் படத்தில் அவரது நடிப்பு, மிக உன்னதமாக இருந்தது.

- Advertisement -

ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்துக்கொண்டு இருந்தவர் ஜெயம் ரவி. அவரது நடிப்பில் வெளியான தனி ஒருவன் படம், எப்போதுமே ரசித்து பார்க்க கூடிய, அதிரடி ஆக்சன் படமாக இருந்து வருகிறது. ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி, வில்லன் டாக்டராக அரவிந்த் சாமி நடித்த இந்த படம், சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இருந்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பலமுறை ஜெயம் ரவியிடம் அவரது அண்ணன் மோகன் ராஜா கால்ஷீட் கேட்டும் அடுத்தடுத்த படங்களின் கமிட்மெண்டால் அவரால் கால்ஷீட் தர முடியவில்லை. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தனி ஒருவன் 2 படத்தை துவக்க திட்டமிட்டிருந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டார் ஜெயம் ரவி.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு ஜெயம் ரவி நடித்த அகிலன், இறைவன், சமீபத்தில் வந்த சைரன் என 3 படங்களுமே தொடர்ந்து ஹாட்ரிக் பிளாப் படங்களாக அமைந்துவிட்டன. இனியும் இதே நிலை நீடித்தால் ஜெயம் ரவி, சினிமாவை விட்டுவிட்டு சீரியலில் நடிக்க போய்விடலாம் என, சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் போன்றவர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் மனைவி, கிருத்திகா உதயநிதி காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக ஜெயம் ரவி, கதாநாயகியாக நித்யாமேனன் நடிக்கின்றனர். இந்த படம் பெரிய வெற்றியை பெறும் என்று ஜெயம் ரவி எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் படத்தின் கதை, நாயகியை மையப்படுத்தி இருப்பதால் நித்யாமேனனுக்கு பெரிய பெயர் கிடைக்கும் என்கின்றனர். இதற்கிடையே கிருத்திகை மனசு வைத்து, ஜெயம் ரவி இமேஜை உயர்த்தும்படியாக காட்சிகள் வைத்தால்தான் உண்டு. இல்லை என்றால், ஜெயம் ரவி மீண்டும் ஒரு பிளாப் படத்தை தந்த நடிகராகி விடுவார்.

- Advertisement -

சற்று முன்