தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பாராட்டப்படுகிற ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. கடந்த பல மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவந்த நிலையில், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கல் பண்டிகைக்கு என்று கூறப்பட்டது. இப்போது, எடுத்து முடித்து இந்தியன் 3 என்ற புதிய தகவல் வந்துள்ளது.
இந்தியன் 2 படத்தை இயக்கும்போது அதில் இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டு, அப்டேட் செய்து படம் எடுக்கப்பட்டதால், அது இந்தியன் 3 ஆக மாறிவிட்டது. எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என, இந்தியன் 3 படத்துக்கு கமலை, டப்பிங் பேச வைத்த கமல், மீண்டும் இந்தியன் 2 படத்துக்காக ரீஷூட் எடுக்க துவங்கியுள்ளார்.
இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக அன்று பேசப்பட்ட ரூ. 30 கோடி சம்பளத்துடன், தற்போதைய நிலவரப்படி, கமல் சம்பளம் ரூ. 120 கோடி என, இந்தியன் 2 ரீஷூட் செய்யப்படுவதால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் கமலுக்கு ரூ. 150 கோடி என்றாலும், 2 படத்துக்கும் சேர்த்துதான் அது என்பது படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு லாபம்தான் என்று கூறப்படுகிறது.
இப்போது ஷங்கர் இயக்கும் படத்துக்கு மேலும், சில மாதங்கள் கூடுதலாக கமல் கால்ஷீட் கொடுத்துள்ளதால், அவரது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி, எச் வினோத் இயக்கும் புதிய படம் துவங்கப்படுமா, என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பதாக ஏற்கனவே ஒத்துக்கொண்ட அடுத்த படமும், உரிய காலத்தில் துவங்கப்படுமா என்பதும் சந்தேகத்தில் உள்ளது. இதுமட்டுமின்றி, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை சனி, ஞாயிறு தினங்களுக்கு தொகுத்து வழங்க அதற்கும் நாட்களை ஒதுக்க வேண்டியுள்ளது.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல், வரும் 2024 ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதில், ஒரு தொகுதியில் மட்டுமே மக்கள் நீதிமய்யம் போட்டியிட்டாலும், அந்த கட்சியின் தலைவர் என்ற முறையில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் தேர்தல் பிரசாரம் போன்றவற்றில் பங்கேற்கவும், முக்கிய கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களிலும் கமல் கலந்துகொள்வதும் கட்டாயமாக உள்ளது.
இப்படி எக்கச்சக்கமாக நேர நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்தியன் படத்தை பொருத்தவரை, வயதான கேரக்டரில் நடிப்பதால் அதற்கான நேர ஒதுக்கீட்டை தருவதை தவிர வேறுவழியில்லை. பிக்பாஸ் சீசனுக்காக வாரம்தோறும் ஒரு நாள் படப்பிடிப்பில் கமல் கலந்துக்கொள்கிறார். அதுவே சனி, ஞாயிறு என 2 தினங்களில் ஒளிபரப்பாகிறது. எச் வினோத், மணிரத்னம் இயக்கும் புதிய படங்களை துவங்கிவிட்டு, தேர்தலுக்கு பின் முழுமையாக நேரம் ஒதுக்கி நடிக்கவும் கமல் திட்டமிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





