- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு என்னுடைய ஒப்புதல் இல்லாமல் வெளியானது... தனது கணவரின் பெயருடன் அறிக்கை...

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு என்னுடைய ஒப்புதல் இல்லாமல் வெளியானது… தனது கணவரின் பெயருடன் அறிக்கை வெளியிட்ட மனைவி ஆர்த்தி… என்னையா நடக்குது இங்க…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. எடிட்டர் மோகனின் மகனான இவர், ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தை அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். தொடர்ந்து தனது சகோதரர் இயக்கத்திலேயே பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்தார் ஜெயம் ரவி.

 

- Advertisement -

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தனி ஒருவன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. தனது, முதிர்ச்சியான நடிப்பின் மூலம் தனி கவனம் பெற்றுள்ள ஜெயம் ரவி, தற்போது பல்வேறு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

- Advertisement -

ஜெயம் ரவிக்கு 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆர்த்தி என்பவரை அவர் தரம் பிடித்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாகவே அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இதனால் விரைவில் இருவரும் பிரிவதாக பேசி வந்தனர்.

 

இதனை நடிகர் ஜெயம் ரவி அண்மையில் உறுதிப்படுத்தினார். குடும்ப நலன் கருதி இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஜெயம் ரவியின் இந்த அறிக்கையை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். தொடர்ந்து விவாகரத்து கோரி அவர் குடும்ப நல நீதிமன்றத்தையும் நாடினார்.

 

இப்படியான சூழலில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஜெயம்ரவியின் மனைவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஆர்த்தி ரவி தனது கணவரின் பெயரை சேர்த்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சமூக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தனது திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து மன வேதனை அடைந்ததாக கூறியிருக்கிறார்.

 

முழுக்க முழுக்க தனது கவனத்திற்கு வராமலும், ஒப்புதல் இல்லாமல் வெளியான அறிக்கை அது என்று அவர் கூறியிருக்கிறார். தனது கணவரிடம் மனம் விட்டு பேச தான் பலமுறை முயற்சி செய்ததாகவும் ஆனால் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கும் ஆர்த்தி ரவி, தனது நடத்தையின் மீது களங்கம் கற்கும் வகையில் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிக சிரமப்பட்டு எதிர் கொள்ள வேண்டிய இருப்பதாக கூறி இருக்கிறார். இந்தக் கடினமான காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாகவும் ஆர்த்தி ரவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்