- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவா மனசுல சக்தி பட இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படம்,...

சிவா மனசுல சக்தி பட இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படம், டைட்டில் வேற லெவலா இருக்குதே? மற்றொரு டிவிஸ்ட்டும் இருக்குது!

- Advertisement -

கடந்த 2009ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்தை எம் ராஜேஷ் டைரக்ட் செய்திருந்தார். ஜீவா நாயகனாகவும் அனுயா நாயகியாகவும் நடித்திருந்தனர். நடிகர் சந்தானம் நடிகை ஊர்வசி மற்றும் கு ஞானசம்பந்தன் சத்யன் ஷகிலா உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் முழுவதும் நடிகர் ஜீவாவுடன் சந்தானம் காமெடி ரோலில் கலக்கி இருந்தார். இந்த படத்தில் ஜீவா மட்டும் ஹீரோ அல்ல, சந்தானமும் ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு படம் முழுவதும் அவர்களது காம்பினேஷனில் காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. ஜீவா சந்தானம் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் இது.

இந்நிலையில் சிவா மனசுல சக்தி படத்தை 2ம் பாகமாக எடுக்க வேண்டும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான முயற்சிகளை இயக்குனர் எம் ராஜேஷ் மேற்கொண்டார். ஆனால் நடிகர் சந்தானம் ரூ. 15 கோடி வரை சம்பளம் கேட்டதுடன் படம் முழுவதும் நான் வருவது போல் கேரக்டர் அமைய வேண்டும் என்றும் கூறியதால் சிவா மனசுல சக்தி 2ம் பாகத்தை இயக்குனர் எம் ராஜேஷ் கைவிட்டு விட்டார்.

எனினும் நடிகர் ஜீவா நடிக்கும் ஒரு புதிய படத்தை அவர் டைரக்ட் செய்கிறார் என்பது உறுதியாகி விட்டது. ஆனால் இது சிவா மனசுல சக்தி படத்தின் 2ம் பாகம் கிடையாது. இது வேறு ஒரு கதைக்களத்தில் உருவாகும் படமாகும். இந்த படத்தை மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்டீரிம்ஸ் என்ற நிறுவனம்தான் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சிவா மனசுல சக்தி படத்துக்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா எம் ராஜேஷ் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது. இந்நிலையில் இந்த புதிய படத்துக்கு ஜாலியா இருந்த ஒருத்தன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டிலே மிக வித்யாசமாக இருப்பதால் நிச்சயமாக இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த படத்தில் நடிகர் சந்தானத்தை கேமியோ ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிகர் ஜீவா சந்தானம் காம்பினேஷன் என்றாலே சென்டிமென்ட் ஆக ஒர்க் அவுட் என்று நம்பப்படுவதால், எப்படியாவது நடிகர் சந்தானத்தை சில காட்சிகளிலாவது காட்டி விட வேண்டும் என்று இயக்குனர் எம் ராஜேஷ் ஆர்வமாக இருக்கிறார். அதனால் கேமியோ ரோலில் சந்தானம் இந்த படத்தில் தோன்ற அதிக வாய்ப்புள்ளது.

சற்று முன்