தீபாவளி படங்கள் என்றாலே, எப்போதுமே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் அதிகரித்துதான் காணப்படும். ஆனால் இப்போதெல்லாம் பண்டிகை நாட்களில் வராத போதும் ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு பண்டிகை காலம் போல கூட்டம் வந்துவிடுகிறது. ஆனாலும் தீபாவளி, பொங்கல் பண்டிகை படங்களை ரசிகர்கள் வரவேற்கவே செய்கின்றனர்.
அந்த வகையில் இந்த முறை தீபாவளி ரிலீஸ் படங்களாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரிலீஸ் ஆனது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகமாக இந்த படம் வெளிவந்துள்ளது.
அதே போல் தீபாவளிக்கு வெளியான படம் நடிகர் கார்த்தி நடித்த ஜப்பான். ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருகன் இயக்கிய இந்த படத்தில் கார்த்தி, பயங்கர கொள்ளைக்காரனாக நடித்திருக்கிறார். கார்த்தியின் 25வது படம் என்ற நிலையில் அதிக எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.
கொம்பன், நம்ம வீட்டுப்பிள்ளை, பருத்தி வீரன் போன்ற படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்த கார்த்தியின் இந்த கெட்டப்பும், கதையம்சமும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே சந்தானத்துடன் அலெக்ஸ் பாண்டியன் படத்தில், திருடன் கேரக்டரில் கார்த்தி நடித்திருந்தார். அந்த காம்பினேசன் போல இந்த படம் இல்லை.
ஆனால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம், அருமையாக உள்ளது. குறிப்பாக படத்தின் இரண்டாம்பகுதி வேற லெவலில் இருப்பதால் ரசிகர்கள் அசந்து போயுள்ளனர். படத்தின் இசை, ஒளிப்பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா என இருவருமே நடிப்பில் அனுபவசாலிகள் என்பதால், படம் வேற லெவலில் தரமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆன ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் இதுவரை அதாவது 10ம் தேதி முதல் 13ம் தேதி (நேற்று) வரை 4 நாட்களில் செய்த மொத்த வசூல் ரூ. 35 கோடி என தெரிய வந்துள்ளது. ஜப்பான் படத்தின் படுதோல்வி இந்த படத்துக்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.





