- Advertisement -
Homeபொழுதுபோக்குதிறமையை யாராலும் முடக்க முடியாது எனக் கூறிய பாலியல் சர்ச்சை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர்,...

திறமையை யாராலும் முடக்க முடியாது எனக் கூறிய பாலியல் சர்ச்சை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், கேம் சேஞ்சர் படம் குறித்து அவர் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

நடிகர் தனுஷ், நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற பாடலுக்கு சிறந்த நடனம் அமைத்து, இந்த ஆண்டில் தேசிய விருது அறிவிக்கப்பட்டவர் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். ஆனால் பாலியல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட இருந்த அந்த விருது ரத்து செய்யப்பட்டது.

ஜெயிலர் படத்தில் காவாலய்யா என்ற தமன்னாவின் குத்தாட்ட பாடலுக்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர்தான். அதேபோல் பல வெற்றிப் படங்களில் குத்தாட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்து பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜானி மாஸ்டர், பாலியல் புகாரில் சிக்கி சிறை சென்றவர். பிறகு இப்போது ஜாமீனில் ஜானி மாஸ்டர் வீடு திரும்பியுள்ளார்.

- Advertisement -

நடன இயக்குனா் ஜானி மாஸ்டர் கடந்த 4 ஆண்டுகளாக தன்னிடம் உதவி நடன இயக்குநராக பணிசெய்த பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு பிறகு, அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் மீது போக்சோ சட்டமும் பாய்ந்த நிலையில் 30 நாட்களுக்கு சிறையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை ஜானி மாஸ்டர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நடன கலைஞர்கள் நடன இயக்குனர்கள் அசோசியேசன் குழுவில் இருந்து என்னை நிரந்தரமாக நீக்கப்பட்டதாக செய்தி பரவுகிறது. அந்த செய்தி உண்மை இல்லை. அது முற்றிலும் பொய்யானது. நான் இப்போதும் அந்த அசோசியேஷனில் உறுப்பினராக தான் இருக்கிறேன்.

- Advertisement -

எனக்கு ஆதரவு தெரிவிக்கும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. சில ஊடகங்கள் மட்டுமே தவறான செய்திகளை பரப்புகின்றன. உண்மையான செய்திகளை அறிந்து வெளியிடுங்கள். ஏனெனில் அதனால் மனிதர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். திறமையை முடக்க யாராலும் முடியாது. யார் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம். நான் அடுத்த பாடலுக்கு என் குழுவுடன் தயாராகி வருகிறேன்.

நான் எனது நடன இயக்குனர்கள் சங்கத்திற்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். அதனால்தான் எனக்கு பான் இந்தியா நடன இயக்குனர் என்ற பெயர் வந்துள்ளது. எனக்கு ஆதரவு தெரிவிக்கும் சங்கத்துக்கு நான் எப்போதும் நன்றி கடன்பட்டுள்ளேன். அதன் தேர்தல் குறித்து நான் சட்டபூர்வமாக போராடி வருகிறேன். என்னால் பல நடன இயக்குனர்கள் உருவாகியுள்ளனர். கேம் சேஞ்சர் படத்தில் என்னுடைய பாடல் ஒன்று வெளிவர இருக்கிறது. அந்த பாடல் நடன காட்சி உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் என்று அந்தப் பதிவில் ஜானி மாஸ்டர் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்