- Advertisement -
Homeபொழுதுபோக்குதைரியம் இருந்தா விவாதத்திற்கு வா.. என்னை பேச தகுதி இல்ல.. என்ன பயில்வான் ரங்கநாதன் சூடு...

தைரியம் இருந்தா விவாதத்திற்கு வா.. என்னை பேச தகுதி இல்ல.. என்ன பயில்வான் ரங்கநாதன் சூடு ஆகிட்டாரு

- Advertisement -

மன்சூர் அலிகான் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசினார். அவரது இந்தப் பேச்சு பெரும் எதிர்வினையை அவருக்கு பெற்று தந்திருக்கிறது. த்ரிஷா மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகும் அவருக்கு எதிராக திரண்டிருக்கிறது. இதன் காரணமாக மன்சூருக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எதிர்ப்பு மட்டுமின்றி அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே ஒரு தரப்பினர் மன்சூருக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர். அதாவது அவர் பேசியது தவறுதான் அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேசமயம் அவர் மட்டும்தான் நடிகையை மட்டமாக பேசுவது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பயில்வான் ரங்கநாதனுக்கெல்லாம் அதுதான் பிழைப்பே என்று கூறுகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்தவ் விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “மன்சூர் அலிகான் எப்போதுமே கேலியாக பேசக்கூடியவர். அப்படி விளையாட்டாக பேசித்தான் இப்போது இந்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். எந்த விதமான பின்புலமும் இல்லாமல் தனது உழைப்பால் இந்த இடத்துக்கு அவர் வந்திருக்கிறார்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக வெளிபப்டுத்தி பாராட்டை பெற்றவர். இப்போது அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஆனால் லியோ படத்தின் சக்சஸ் மீட்டிலேயே அவர் இந்தப் படத்தில் ஒரு ரேப் சீன்கூட இல்லை என்றார். மேலும் மடோனா பாப்பா என்றார். அப்போதெல்லாம் த்ரிஷாவும், விஜய்யும் சிரித்து ரசித்து கேட்டுக்கொண்டிருந்தனர்.

- Advertisement -

பத்திரிகையாளர் சந்திப்பிலும் அதைத்தானே செய்கிறார். இப்போது மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவித்து அவரை கார்னர் செய்கிறார்கள். மன்சூர் அலிகானிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வெளியிட்டதில் என்ன நியாயம் இருக்கிறது. நடிகைகள் நடிகர் சங்க கூட்டத்துக்கு வருவதே இல்லை. அதையெல்லாம் ஏன் சங்கம் கேட்பதில்லை.

மன்சூர் அலிகான் தயாரித்திருக்கும் சரக்கு படம் டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸாகிறது. இப்போது அவரை இந்த பாடு படுத்துகிறார்கள். மன்சூர் அலிகான் செய்த பத்திரிகையாளர் சந்திப்பில், பயில்வான் ரங்கநாதன் நடிகைகளை பற்றி தவறாக பேசுகிறார் என்று கேட்டிருக்கிறார்.

அந்த முட்டாள் பசங்களுக்கு எனது எச்சரிக்கையை கொடுக்கிறேன். நான் எந்த நடிகர், நடிகையை பற்றி தவறாக சொன்னேன் என்று ஆதாரத்துடன் பொது விவாதத்திற்கு வந்து பேசு. எந்த சூழலிலும் நான் யாரையும் அவதூறாகவோ, பொய்யாகவோ பேசியதே. என்னை பற்றி பேச யாருக்கும் கோக்கியதை கிடையாது” என்றார்.

- Advertisement -

சற்று முன்