முன்னணி இசையமைப்பாளரான இமான் கடந்த வாரம் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர், “சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அதனை வாழ்நாள் முழுவதும் நான் மறக்கமாட்டேன். இந்த ஜென்மத்தில் இனி அவருடன் இணைந்து பணியாற்றமாட்டேன்” என தெரிவித்திருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இமானுக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் ஏற்பட்ட விவாகரத்துக்கு சிவகார்த்திகேயனே காரணம் என பலரும் கூறினார்கள். ஆனால் அதனை மோனிகா மறுத்தார். இந்த சூழலில் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், ”நடிகர்கள் சிம்பு, தனுஷின் பர்சனல் பக்கங்கள் என்னவென்று மக்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. ஆனால் சிவகார்த்திகேயனை பலரும் நம்ம வீட்டு பிள்ளையாகவே நினைக்கிறார்கள். அந்த இமேஜ் இமான் குற்றச்சாட்டின் மூலம் உடைந்துவிட்டது.
சின்னத்தம்பி படத்துக்கு பிறகு பிரபுவுக்கும் குஷ்பூவுக்கும் இருந்த உறவு பற்றி வெளியே தகவல் கசிந்தது. அது அவரது சினிமா கரியரை ரொம்பவே பாதித்தது. பிரபுவுக்கு நடந்தது மாதிரியே சிவகார்த்திகேயனுக்கும் இப்போது நடந்திருக்கிறது. சினிமா நடிகர்கள் என்றாலே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணத்தை மீறிய உறவு, தொழிலில் கருப்பு பணம் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக இருக்கும். அவர்களது வாழ்க்கையில் இவை இரண்டையும் தவிர்க்க முடியாது.
இசையமைப்பாளர் இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்தது நம்பிக்கை துரோகம். ஏனெனில் ஒருவர் உங்களை தம்பி மாதிரி பாவித்து வீட்டில் இடம் கொடுத்தால் அந்த இடத்தில் ரொம்பவே கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். அதுதான் மரியாதை. அங்கு சென்று கேடுகெட்ட செயலை செய்தால் அதனை மன்னிக்கவே கூடாது. இமான் ரொம்பவே அப்பாவியானவர்.
அவர் அந்தப் பேட்டியில் சொன்னது எதேர்ச்சையாக நடந்தது. மக்கள் பல விஷங்களை மன்னித்துவிடுவார்கள். சில விஷயங்களை மன்னிக்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் நம்பிக்கை துரோகம். அதைத்தான் சிவகார்த்திகேயன் செய்திருக்கிறார். சிவகார்த்திகேயன் – டி.இமான் விஷயம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே எனக்கு தெரியும். இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் இந்த விஷயம் எனக்கு ஆதாரத்துடன் தெரியவந்தது.” என்றார்.





