மத்திய அரசின் 72வது தேசிய விருதுகள் குறித்து இன்று வெளியான வீடியோ ஒன்றில் மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி பேசியிருப்பதாவது, கேப்டன் மில்லர் படத்துக்கு சிறந்த படம் என்று தேசிய விருது அறிவிச்சிருக்காங்க. சிறந்த நடிகர் ஸ்பெஷல் மென்சன் அப்படீன்னு தனுஷூக்கு கொடுத்திருக்காங்க. அவர் சிறந்த நடிகர் என்பதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால் கேப்டன் மில்லர் படத்துக்கு ஒரு கேட்டகரியில் விருது கொடுத்திருக்காங்க. அதாவது தேசிய சமூக மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் படம் என்று கூறியிருக்கின்றனர். அதுதான் புரியலே. கேப்டன் மில்லர் படத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன சம்பந்தம்? கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடந்த இடங்களில் பாரஸ்ட் பகுதிகளில் கன்னியாகுமரி மதுரை பகுதிகளில் எல்லாம் எடுத்தாங்க.
அங்க எல்லாம் கன்னாபின்னா என்று பாம்ப் பிளாஸ்ட் பண்ணி பெரிய பிரச்னை ஆச்சு. அந்த பகுதி மக்கள் எல்லாம் திரண்டு வந்து போராட்டம் நடத்தி படப்பிடிப்பை நிறுத்தி பல பிரச்னைகள் நடந்தது. அப்புறம் ஷூட்டிங் நடத்த முடியாமல் பைன் கட்டி என்னென்னமோ பஞ்சாயத்து எல்லாம் நடந்தது. அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் எல்லாம், இவங்களாலே எங்க ஏரியா சுற்றுச்சசூழல் எல்லாம் ரொம்பவும் பாதிக்கப்படுதுன்னு புகார் சொன்னாங்க.
அப்புறம் அந்த படத்துலேயேயும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கிற மாதிரி ஒரு காட்சியும் கிடையாது. கதையும் கிடையாது. ஒரு வசனமும் கிடையாது. அப்புறம் எப்படி இப்படி ஒரு கேட்டகிரியில் தேசிய விருதை இந்த படத்துக்கு தூக்கி கொடுக்க முடியும்? அப்படி வாங்கும் போது கூச்சமாக இருக்காதா? முதலில் இந்த படத்தை பார்த்துதான் செலக்ட் செய்தார்களா? அப்புறம் ராயன் படத்தை தமிழில் சிறந்த படம் என்று செலக்ட் பண்ணியிருக்காங்க.
2024ல் தமிழில் நிறைய நல்ல படங்கள் வந்தது. வாழை தங்கலான் ஜமா லப்பர் பந்து மகாராஜான்னு எத்தனை நல்ல படங்கள் வந்தது? அமரன் படம் நம் நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ வீரர் ஒருவரின் உண்மையான வாழ்க்கை கதை. அந்த கதையை நீங்க ஊக்குவிக்க மாட்டீங்களா? அது நல்ல திரைப்படம் இல்லையா? சிறந்த இயக்குனருக்கு விருது கொடுக்கும் போது அவர் இயக்கிய படமும் சிறந்த படம்தானே? அதற்கு ஏன் விருது கொடுக்கவில்லை?
சட்டத்துக்கு விரோதமா செம்மரம் கடத்தி விக்கற கிரிமினல் ஹீரோ, அதை தடுக்கிற கடமை மிக்க போலீஸ் அதிகாரிகளை கொல்கிற புஷ்பா 2 படத்துக்கு சிறந்த திரைக்கதை என தேசிய விருது தரப்படுகிறது. தங்கலான் படத்துக்காக அவ்வளவு கஷ்டப்பட்ட சியான் விக்ரம் மாதிரி விருது வாங்கற யாராவது ஒருவராவது கஷ்டப்பட்டு இருப்பாங்களா என்று ஜெ பிஸ்மி ஆவேசமாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





