- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இயக்குனர்கள் இனியாவது திருந்துவார்களா? - விளாசித் தள்ளிய பிரபலம்!

லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இயக்குனர்கள் இனியாவது திருந்துவார்களா? – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

பாலிவுட்டிலும் வெளிநாடுகளிலும் கொகைன் போன்ற போதைப் பொருட்கள் பயன்பாடு இருந்த நிலையிலும், இப்போது தமிழ்நாட்டிலும் அது புழக்கத்தில் இருப்பது உறுதியாகி விட்டது. சமீபத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரை போதைப் பொருள் விவகாரத்தில் போலீசார் கைது செய்ய நிலையில், இன்னும் முக்கிய சில நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் இந்த விவகாரத்தில் போலீசாரிடம் சிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்றைய சூழலில் சினிமா என்பது சமூகத்தில் ஒரு முக்கியமான ஊடகமாக இருக்கிறது. சினிமாவில் காட்டப்படும் பல விஷயங்களை இளம் வயது ரசிகர்கள் தங்களது வாழ்க்கையின் தெரிந்தோ தெரியாமலோ கடை பிடிக்க துவங்கி விடுகின்றனர். அது நல்லதா கெட்டதா என்பது பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவது இல்லை. அல்லது அதுபற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் இருப்பது இல்லை.

- Advertisement -

மூத்த சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இதுகுறித்து ஒரு வீடியோவில் மிக கடுமையாக பேசியிருக்கிறார். அதில் அவர் குறிப்பாக சினிமாவில் மட்டுமின்றி சமூகத்திலும் போதைப் பொருள் பரவ இளைஞர்கள் மத்தியில் அதுபற்றிய ஆர்வம் ஏற்பட இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற பெரிய இயக்குனர்களும் ஒரு முக்கிய காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி பேசியிருக்கிறார்.

இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் போன்றவர்களின் படங்களில், போதைப் பொருளை எப்படி வாங்குவது, எப்படி பயன்படுத்துவது, போதைப்பொருள் பயன்படுத்துவதால் என்ன நடக்கும் என்பதை எல்லாம் விலாவாரியாக காட்டி இளைய சமுதாயத்தை கெடுக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்களை போதை பழக்கத்துக்கு தூண்டிவிட்டு கெடுக்கிறார்கள் என்றும் செய்யாறு பாலு புகார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் விக்ரம். இந்த படத்தில், வில்லனாக நடித்த நடிகர் விஜய் சேதுபதி கேரக்டர் போதைப் பொருள் உட்கொள்வதால்தான் வலிமையான சக்தியை பெறுவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காட்டியிருப்பார். இதனால் இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல மாட்டார்களா? கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாமல் தனது படங்களில் எல்லாம் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட கதையை லோகேஷ் கனகராஜ் எடுக்கிறார்.

அத்துடன் லோகேஷ் கனகராஜ் தனது இயக்கத்தில் ரஜினி கமல் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தில்தான் போதைப் பொருளை தன் கதையின் முக்கிய கருவாக வைத்திருக்கிறார். இதனால் கோடிக்கணக்கான மக்களிடம் அவர் சொல்லும் கருத்து சென்று சேருகிறது. இது அப்பட்டமான சமூக விரோத செயல். அதே போல் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற காமெடி படத்தில் போதைப் பொருள் தான் மைய கருத்து. இப்படிப்பட்ட படங்களை தரும் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் போன்ற இயக்குனர்களால் தான் சமூகமே சீரழிகிறது என்றும் செய்யாறு பாலு அந்த வீடியோவில் பகிரங்கமாக குற்றம் சாட்டி பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்