- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா மீண்டும் கருத்து... ஆறிப்போன புண்ணை இவங்க கிளறாமல் விட...

கங்குவா திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா மீண்டும் கருத்து… ஆறிப்போன புண்ணை இவங்க கிளறாமல் விட மாட்டாங்க போலயே…

- Advertisement -

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக அளவு கேலி கிண்டலுக்கு ஆளான திரைப்படங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2. இன்னொன்று சூர்யா நடிப்பில் ரிலீஸ் செய்யப்பட்ட கங்குவா. இத்தனைக்கும் இந்த இரண்டு திரைப்படங்களின் மீதும் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அவற்றை இந்த திரைப்படங்கள் பூர்த்தி செய்ய தவறின. குறிப்பாக இந்தியன் 2 திரைப்படத்தை, அதன் முதல் பாகத்தோடு கம்பேர் செய்ய முடியாது என்று கூறி ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஓடிடியில் அந்த திரைப்படம் வெளியான போதும் இதே நிலைதான் ஏற்பட்டது. இதற்கு அடுத்தபடியாக பேசப்பட்டது கங்குவா படம்.

- Advertisement -

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக இதன் படப்பிடிப்புக்கு மட்டும் செலவிட்டார் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. அதிக பொருட்செலவும் ஆனது. ஆனால் இதுவெல்லாம் படத்திற்கு கொஞ்சம் கூட எடுபடவில்லை. படத்தின் திரைக்கதை சுத்தமாக சரியில்லை என்று அப்போதே கூறினார்கள்.

குறிப்பாக படம் முழுக்க சூர்யா கத்திக் கொண்டே இருப்பதாகவும், பிளாஷ்பேக் காட்சிகளும் அந்த அளவுக்கு சுவாரசியமாக இல்லை என்று விமர்சனங்களும் இருந்தன. இதனால் கங்குவா திரைப்படத்தின் வசூல் ஆட்டம் காண வைத்தது. அந்த திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லை. வசூலும் குவிக்கவில்லை. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

- Advertisement -

படத்திற்கு தொடர்ந்து நெகடிவ் ரிவ்யூ வருவது குறித்து பொங்கி எழுந்தார் ஜோதிகா. இந்த நிலையில் தற்போதும் அவர் கங்குவா திரைப்படம் குறித்து பேசி இருக்கிறார். அதில், நான் மிகவும் சுமாரான திரைப்படங்கள் அல்லது மோசமான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறேன்.

இதற்கான விமர்சனங்கள் அந்த அளவு கடுமையாக இருந்தது இல்லை. ஆனால் என்னுடைய கணவர் திரைப்படம் மட்டுமே நெருக்கடிக்கு ஆளானது. இது எப்படி நியாயமாகும். படத்தில் சில காட்சிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் கடினமாக உழைத்திருக்கிறார்கள். மோசமான திரைப்படங்களை விட, இந்தத் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றது என்னை பாதிக்கச் செய்தது. ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக இருப்பது மிகவும் சோகத்திற்கு உரியது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்