- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு கோடி பார்வையாளர்களை கடந்த காதலிக்க நேரமில்லை படப் பாடல்; ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?...

ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த காதலிக்க நேரமில்லை படப் பாடல்; ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? – ஜெயம் ரவிக்கு கம்பேக் கிடைக்குமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. ஆரம்பத்தில் தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம் அடங்க மறு உனக்கும் எனக்கும் பேராண்மை ஜெயம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி வனமகன் என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஜெயம் ரவி. ஆனால் இப்போது தொடர்ந்து தோல்வி படங்களை தந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.

இறைவன், அகிலன், சைரன் 108 உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பிரதர் படம் வரை ஜெயம் ரவிக்கு தோல்வி படங்கள் தொடர்கிறது. இதற்கிடையே மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த படம் முதல் பாகம் வெற்றியும், 2ம் பாகம் படுதோல்வியும் அடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா டைரக்ட் செய்துள்ள காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நித்யாமேனன் நடித்துள்ளார். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய கதை என்றாலும், ஜெயம் ரவிக்கு கம்பேக் தரும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வணக்கம் சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி, 2வது படமாக காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, நித்யாமேனன் ஆகியோருடன் யோகிபாபு, லால், வினய், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.

- Advertisement -

காதலிக்க நேரமில்லை படத்தில் என்னை இழுக்குதடி என்ற பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலை ஏஆர் ரகுமான், தீ ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். கடந்த நவம்பர் 22ம் தேதி வெளியான இந்த பாடல் இதுவரை ஒரு கோடி பேர் பார்வையாளர்களை கடந்துள்ளது. பெரிய அளவில் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த பாடலை போலவே படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தால், ஜெயம் ரவிக்கு காதலிக்க நேரமில்லை ஒரு கம்பேக் படமாக அமையும். இந்த சூழலில் காதலிக்க நேரமில்லை படம், வருகிற 20ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரொமாண்டிக் காதல் கதையில் உருவான இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்