தமிழ் சினிமா துறையில் நடக்கும் சில விஷயங்களை பார்க்கும்போது, இதெல்லாம் கனவா, இல்லை நனவா என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால், ஒரு இயக்குநருக்கு ஒரு தயாரிப்பு நிறுவனம் கதை எழுதுவதற்காக ரூ. 275 லட்சம் ரூபாய்க்கு பிரபல ஓட்டலில் சூட் ரூம் போட்டு கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்பெல்லாம், தமிழ் நடிகர்கள் நடிக்க வந்த காலத்தில் சகல வசதிகளுடன் கேரவன் வேன், ஏசி வசதி கொண்ட நட்சத்திர ஓட்டல்கள் எல்லாம் கிடையாது. ஒரு ஊரில், கிராமத்தில் படப்பிடிப்பு நடக்கிறது என்றால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர், பஞ்சாயத்து தலைவர். ஊர் தலைவர் வீடுகளில் தங்கிக்கொள்வது கலைஞர்களின் வழக்கம்.
இன்னும் குக்கிராமமாக இருக்கும் பட்சத்தில் அங்குள்ள வசதி ஓரளவு உள்ள வீடுகளில் தங்கிக்கொள்வதும் உண்டு. குறிப்பாக பாரதிராஜா போன்றவர் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு இந்த அனுபவம்தான் கிடைக்கும். நடிப்பதுதான் முக்கியம், வசதிகள் முக்கியமில்லை என்று கலைஞர்கள் அன்று நினைத்தனர். அதற்கேற்ப தங்களது சிரமங்களை பொறுத்துக்கொண்டனர்.
நடிகர் செந்தில், நடிகை கோவை சரளா போன்றவர்கள் கூறுகையில், நாங்கள் நடித்த 1980, 90 காலகட்டங்களில் கேரவன் போன்ற வசதி எல்லாம் கிடையாது. படப்பிடிப்பு இடைவேளைகளில் அங்குள்ள வேப்ப மரத்தடிகளில் போய் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்போம். கடும் வெயிலில் நிழலை தேடிப்போய் உட்கார்ந்து விடுவோம் என்று கூறியிருந்தனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கிறார். இவர் லியோ படத்தை தொடர்ந்து அடுத்து, ரஜினி 171 படத்தை இயக்க உள்ளார். இதற்கான கதை மற்றும் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை லோகேஷ் கனகராஜ் துவங்கியுள்ளார். கதைக்கான ஸ்கிரிப் எழுதும் பணிகளை சில தினங்களில் துவங்க உள்ளார்.
இந்நிலையில் ரஜினி 171 படத்தை இயக்கும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், லோகேஷ் கனகராஜூக்கு என, பெசண்ட் நகரில், பெரிய ஓட்டல் ஒன்றில் சகல வசதிகளுடன் சூட் ரூம் ஒன்று ஏற்பாடு செய்து தந்துள்ளது. இதன் மாத வாடகை ரூ. 2.75 லட்சம் ரூபாய். இங்கு தங்கி, எந்த தொந்தரவும் இல்லாமல், ரிலாக்ஸாக கதை எழுதுங்க என சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கூறியிருக்கிறாராம். சூப்பர் ஸ்டாருக்கு படம் பண்ற டைரக்டருன்னா சும்மாவா, என கெத்து காட்டுபவர் பலர் இருக்கையில், இப்போதும் அதை அதே பணிவுடன் ரஜினி 171 படம் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.





