- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல்ஹாசனை வைத்து ஆக்சன் தெறிக்க தெறிக்க படம் எடுக்க போகும் அன்பறிவ் மாஸ்டர்கள்... இதில் அந்த...

கமல்ஹாசனை வைத்து ஆக்சன் தெறிக்க தெறிக்க படம் எடுக்க போகும் அன்பறிவ் மாஸ்டர்கள்… இதில் அந்த இளம் மலையாள நடிகையும் இருக்கிறாரா?…

- Advertisement -

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி வெளியானது தக் லைஃப் திரைப்படம். மணிரத்னம் இயக்கியிருந்த திரைப்படத்தில் சிம்புவும் நடித்திருந்தார். திரிஷா அபிராமி நாசர் அசோக் செல்வன் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர். மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

குறிப்பாக தக் லைப் திரைப்படத்தின் இரண்டாம் பாதி எடுபடவே இல்லை என்று பலரும் கூறினர். கமல்ஹாசனை வைத்துக்கொண்டு திரைக்கதை எங்கெல்லாமோ பயணிக்கிறது என்றும், சிம்பு கதாபாத்திரமும் திரிஷா கதாபாத்திரமும் அந்த அளவுக்கு சிறப்பாக எழுதப்படவில்லை எனவும் தெரிவித்தனர். மற்ற நடிகர் நடிகைகளும் வீணடிக்கப்பட்டதாகவே கூறினர்.

- Advertisement -

கலவையான விமர்சனத்தை தாண்டி இந்த திரைப்படம் இணையத்தில், கேலி கிண்டலுக்கு ஆளானது. பலரும் சமூக வலைதளத்தில் எல்லை மீறி இந்த திரைப்படத்தை விமர்சித்தனர். படத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாகவே அமைந்தது. இது இப்படி இருக்க தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆயத்தமாகிவிட்டார் கமல்ஹாசன்.

இதில் அவர் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டாம் பாகத்தில் பெரும்பாலான காட்சிகளை சங்கர் எடுத்து முடித்து விட்டார். இப்படியான சூழலில் மூன்றாம் பாதத்திற்காக சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கு சங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தயக்கம் காட்டியதாக கூறப்படும் நிலையில், தற்போது அதன் பணிகள் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதன் நடுவே, தனது 237 வது திரைப்படத்திற்காக சண்டை மாஸ்டர்களும், இரட்டை சகோதரர்களுமான அன்பறிவ் உடன் கைகோர்த்து இருக்கிறார் கமல்ஹாசன். முழுக்க முழுக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆக்சன் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக மூவரும் அண்மையில் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வந்ததாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இவர் சிம்பு நடித்த மாநாடு படத்தில் நடித்திருப்பார். சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்திலும் இடம்பெற்றார் கல்யாணி பிரியதர்ஷன். இப்படியான சூழலில்தான் அவர் கமல்ஹாசனின் திரைப்படத்தில் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்