நடிகர் சிம்பு தக்லைஃப் படத்தை தொடர்ந்து இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சென்னையில் 2வது ஷெட்யூல் ஷூட்டிங் நடந்து வருகிறது.
அரசன் படத்தை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் முதலில் நடிகை மிர்ணாள் தாகூர் நடிக்க கமிட் ஆனார். கதை மிகவும் பிடித்து விட்டதாக கூறி கால்ஷீட் ஒதுக்கினார். ஆனால் அதன்பிறகு அவரிடம் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை.
இதற்கிடையே நடிகர் தனுஷூக்கும் மிர்ணாள் தாகூருக்கும் இடையே காதல் என்று கிசுகிசு பரவிய நிலையில் அரசன் படத்தில் அவர் நாயகியாக நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு சிம்பு வந்து விட்டார். அஸ்வத் மாரிமுத்துவிடம் மிர்ணாள் தாகூர் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
ஆனால் அதற்கு பிறகு சிம்புவிடம் போனில் பேசிய மிர்ணாள் தாகூர், இந்த படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார். மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் போனில் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரிடம் பேசிய சிம்பு, இல்லை, இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று திட்டவட்டமாகவே மறுத்துவிட்டார்.
இந்நிலையில் நடிகை சாய்பல்லவிடம் இந்த படத்தில் நடிக்க கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் டி55 தனுஷ் படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டதால் அவரும் சிம்புவுடன் நடிக்க தேதி இல்லை என்று மறுத்திருக்கிறார். அதன்பிறகு நடிகை ருக்மணி வசந்திடம் கேட்ட போது, அவரும் தேதி இல்லை என்று கூறியிருக்கிறார்.
ஏனெனில் அவர் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் ஹீரோவாக தனுஷ் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க கமிட் ஆகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இப்படி மிர்ணாள் தாகூர் சாய் பல்லவி மற்றும் ருக்மணி வசந்த் என 3 நாயகிகள் சிம்பு படத்தில் நடிக்க மறுத்திருப்பது ரசிகர்களிடம் பெரிய விவாதமாக மாறியிருக்கிறது.





