- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் 233: நின்று போன படத்தை கையிலெடுக்கும் கமலஹாசன். அடுத்த 234 படம் யாருடன் தெரியுமா?...

கமல் 233: நின்று போன படத்தை கையிலெடுக்கும் கமலஹாசன். அடுத்த 234 படம் யாருடன் தெரியுமா? – வெளியான தகவல்

- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான கமலஹாசன் கடைசியாக நடித்த விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அடுத்து அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை பெற்றுள்ளது. உலகநாயகனான கமலஹாசன் கோலிவுட்டில் பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்பை வெளிக்காட்டிய பின்னர் தற்போது அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்த கமலஹாசன் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இந்தியன் 2 படபிடிப்பு நிறைவடைந்துள்ள வேளையில் “கமலஹாசன் 233” என்கிற அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஆவலை தூண்டி உள்ளது. அந்த வகையில் அவரது அடுத்த படத்தினை எச்.வினோத் இயக்குவார் என்று கூறப்பட்டது.

H-Vinoth

அண்மையில் அஜித்துடன் வலிமை, துணிவு போன்ற படங்களில் பணியாற்றியுள்ள ஹெச்.வினோத் அடுத்ததாக கமலஹாசனுடன் இணைவார் என்று கூறப்பட்டது. அதோடு அந்தப் படமானது 125 கோடி ரூபாய்க்கு நெட் பிலிக்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் ஹச்.வினோத் அதனை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

- Advertisement -

மேலும் களமஹாசன் ஏற்கனவே உருவாக்க நினைத்து ட்ராப்பான “தலைவன் இருக்கிறான்” என்கிற படம் தான் “கமல் 223”-வது படமாக வெளியாக உள்ளது என்றும் அதற்கு அடுத்து “கமல் 234” என்கிற படம் மணிரத்தினம் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்