விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் இப்போது நடந்து வருகிறது. நேரடி போட்டியாளர்களாக 18 பேரும், வைல்டு கார்டு போட்டியாளர்களாக 5 பேரும் கலந்துக்கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். வெளியேறிய இருவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சிகளை காட்டிலும் இந்த முறை வீட்டுக்குள் பிரச்னைகளும், சண்டைகளும் புதுப்புது பிரச்னைகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இதில் வார்த்தைகள், விமர்சனங்கள் வரம்பு மீறியதாக இருந்து வருகிறது. எவ்வித அடிப்படை நாகரிகமும் இல்லாமல் வீட்டுக்குள் போட்டியாளர்கள் பேசிக்கொள்வது பார்வையாளர்களை முகம்சுளிக்க வைக்கிறது.
அதுவும் பிக்பாஸ் வீட்டுக்குள் நிக்ஸன், அர்ச்சனா இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. வினுஷா குறித்து உருவக்கேலி செய்து நிக்ஸன் பேசினார் என குத்திக்காட்டியதாக, அர்ச்சனாவை சகட்டுமேனிக்கு திட்டுகிறார் நிக்ஸன். அது மூஞ்சிய பாரு, அது மூஞ்சிய பாரு, ச்சீ, நீ எல்லாம் ஒரு ஆளா என திட்டி சொருகிடுவேன் என ஆத்திரமான நிக்ஸன் சொன்னது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்ன ஒரே காரணத்துக்காக பிரதீப் ஆண்டனியை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றியவர் கமல். அதனால், அர்ச்சனாவை பார்த்து சொருகிடுவேன் என்று சொன்ன நிக்ஸனை கண்டிப்பாக கமல் சும்மா விட மாட்டார். நிச்சயம் வெளியே அனுப்பியே தீருவார் என பலரும் பரவலாக பேசி வந்தனர். இதுபோன்ற பெண்களுக்கான எதிரான பேச்சை கமல் அனுமதிக்கவே மாட்டார் என்றும் கூறி வந்தனர்.
பிக்பாஸ் 60வது நாளை இன்று தொடுகிறது. இந்நிலையில், நேற்று சனிக்கிழமை நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சொருகிடுவேன் என்று சொன்ன நிக்ஸனை பார்த்து எங்க சொருகுவீங்க, வயித்துலயே, நெஞ்சுலயா, இல்ல கண்ணிலயே என வேட்டையாடு விளையாடு படத்தில், ராயபுரம் பீட்டர் முன் ஒரு கண்ணை கைவிரல்களால் விரித்து காட்டுவது போல் அதே மாதிரி காட்டி கேட்டார். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் கைதட்டல் பறந்தது. அதன்பின் மஞ்சள் கார்டை காட்டி எச்சரித்த கமல், இது சிவப்பு கார்டாக மாறிவிடும் ஜாக்கிரதை என மிரட்டிவிட்டு அத்துடன் விட்டு விட்டார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்ன ஒரே ஒரு குற்றச்சாட்டுக்காக பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பிய கமல், மிக அசிங்கமாக திட்டி ஆத்திரமாக சொருகிடுவேன் என்று சொன்ன நிக்ஸனை வெறும் எச்சரிக்கையோடு நிறுத்திக்கொண்டது சரியல்ல. இது போங்குனி ஆட்டம். மாயா, பூர்ணிமா போன்றவர்கள் பிரதீப்புக்கு எதிராக குரல் கொடுத்ததை போல, அர்ச்சனாவுக்கு ஏன் ஆதரவு தரவில்லை. குறிப்பாக கமல்ஹாசனே இந்த விஷயத்தில் மய்யத்தில் நடுநிலையாக நிற்காமல், ஒரு பக்கமாக சாய்ந்து விட்டாரே எனவும் விமர்சித்து வருகின்றனர்.





