- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்புவின் 48 ஆவது படத்தில் நடந்திருக்கும் எதிர்பாரா டிவிஸ்ட். களத்தில் குதித்த உலகநாயகன் - மிரட்டலா...

சிம்புவின் 48 ஆவது படத்தில் நடந்திருக்கும் எதிர்பாரா டிவிஸ்ட். களத்தில் குதித்த உலகநாயகன் – மிரட்டலா இருக்கப்போகுது

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிம்பு தற்போது தன்னுடைய கரியரின் செகண்ட் இன்னிங்ஸில் மாஸ் காட்டி வருகிறார். மாநாடு படத்திற்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சிம்பு கூடுதல் உடல் எடை காரணமாகவும் அதிக அளவில் கிண்டல் செய்யப்பட்டு வந்தார். ஆனால் லாக் டவுனில் தன்னுடைய உடற்பகுதியை மேம்படுத்திய சிம்பு மீண்டும் பழைய லுக்குக்கு வந்து மாநாடு படத்தில் மாபெரும் வெற்றியைத் தந்தார்.

அதனை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” அதன் பின்னர் “பத்து தல” என அடுத்தடுத்த வெற்றிகளை தந்த சிம்பு தற்போது மீண்டும் தான் விட்ட இடத்தை பிடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்த படங்களுக்கான கதை தேடலில் இருக்கும் சிம்பு பெயரிடப்படாத “எஸ்.டி.ஆர் 48” படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தினை “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தினை எடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கிறார். மேலும் இந்த படத்தினை கமலஹாசனின் ஆர்.கே பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி “எஸ்.டி.ஆர் 48” படத்தின் கதையை முதலில் ரஜினிகாந்துக்கு எழுதப்பட்டதாகவும் அந்த கதையை கமலஹாசன் இடம் கொண்டு சென்ற தேசிங்கு பெரியசாமி ரஜினி அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அதில் சில மாற்றங்களை செய்து சிம்புக்காக அந்த கதையை தயார் செய்து இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கமலஹாசனும் “எஸ்.டி.ஆர் 48” படம் அவரது பேனரில் உருவாகிறது என்றும் அந்தப் படத்தின் ஹீரோ சிம்பு என்றும் இயக்குனர் தேசிய பெரியசாமி தான் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் ஒன்று நடந்துள்ளது. அது யாதெனில் : இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து கமலஹாசனும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல தமிழ் சினிமா விமர்சகர் ஒருவர் இந்த செய்தியை பகிர்ந்துள்ள வேளையில் ஒருவேளை அப்படி சிம்புவும் கமலும் இணைந்து நடித்தால் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ள வேளையில் நிச்சயம் அவர் தயாரிக்கும் இந்த “எஸ்.டி.ஆர் 48” படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிம்பு இந்த படத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள வேளையில் கமலஹாசனும் இணைந்தால் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

சற்று முன்