தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு நடிக்கும் 48வது படம் அடுத்த ஆண்டுதான் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்து. நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க தாமதம் ஆக என்ன காரணம், இந்த படம் வரலாற்று படம் என்பதால் 5 ஆயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நடிகர்களுக்கு தலைக்கவசம், சிப்பாய் உடை போன்றவை தயாரிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால், இது பொய்யான தகவல் என்றும், இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் இமேஜ் குளோனிங் மூலம் 100 பேரை லட்சம் பேராக கூட திரையில் காட்ட முடியும். பாகுபலி, பொன்னியின் செல்வன் படங்களில் அப்படித்தான் அந்த காட்சிகள் எடுக்கப்பட்டதால், இது பொய்யான தகவல் என்று தெரிய வந்துள்ளது.
சிம்பு படம் தாமதமாக, ராஜ்கமல் பட நிறுவனம்தான் காரணம். படம் தயாரிப்பு சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கும் இந்த கமல் நிறுவனம், மற்றொரு பட தயாரிப்பாளரான ஐசரி கணேஷிடம் தடையின்மை சான்று (என்ஓசி) வாங்கி வந்தால் மட்டுமே, படத்தை துவங்க முடியும் என்று கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டனர்.
அதாவது ஐசரி கணேஷ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4.5 கோடி ஐசரி கணேஷ் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு கோடி ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் ஆக வாங்கினேன், அதையும் திருப்பி தர முடியாது என சிம்பு தரப்பும் கூறியதால் இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றுவிட்டது.
இந்த விவகாரத்தில் நாளை கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் சிம்பு படத்துக்கு எதுவும் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால், இப்போதே என்ஓசி வாங்கி வருமாறு, கமல் தரப்பில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அதனால்தான் சிம்புவின் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தாமதம் நீடிப்பதாக ஒரு உண்மை தகவல் கிடைத்துள்ளது.





