- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் பட இயக்குநரை 2 ஆண்டுகள் காத்திருக்க சொன்ன கமல், திடீரென பிளானை மாற்றிக்கொண்ட கமல்ஹாசன்...

அஜீத் பட இயக்குநரை 2 ஆண்டுகள் காத்திருக்க சொன்ன கமல், திடீரென பிளானை மாற்றிக்கொண்ட கமல்ஹாசன் – இப்போ இப்படி ஒரு தகவல் வந்துருக்கு

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனை பொருத்தவரை இது அறுவடைக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். விக்ரம் படத்துக்கு பிறகு அவரது காட்டில் அடைமழையாக கோடிகளில் பணம் குவிந்துக்கொண்டு இருக்கிறது. அதனால் தனது நேரத்தை ஒருநாள் கூட வீணாக்காமல் அதை கரன்ஸி கட்டுக்களாக மாற்றிக்கொண்டே இருக்கிறார் கமல்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்துக்கு முன்பு வரை கமல்ஹாசன் பல கோடிகளை முதலீடு செய்து, தனது படங்களை எடுப்பார். அது மிகப்பெரிய அளவில் தோல்வி அடையும். அல்லது சுமாரான வெற்றியை பெறும். அதனால் ஒரு படத்தின் வெற்றியை அடுத்த படத்தில் முதலீடு செய்வார் கமல்ஹாசன். இதனால் பெரிய அளவில் அவர் சினிமாவில் சம்பாதிக்கவில்லை.

- Advertisement -

ஆனால் விக்ரம் படத்துக்கு பிறகு கமலுக்கு இந்தியன் 2, இந்தியன் 3 படங்களில் நடித்துவரும் கமல், பான் இந்தியா படமான புராஜெக்ட் கே என்ற படத்தில் நடிக்கிறார். இதில் வில்லனாக நடிக்கும் கமல்ஹாசனின் சம்பளம் ரூ. 150 கோடி. அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கிய இந்தியன் 2, 3 படங்களுக்கும் கமல் சம்பளம் ரூ. 150 கோடிதான். மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்திலும் நடிக்க உள்ளார்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒருநாள் கமல் பங்கேற்கிறார். அந்த ஒரு நாளில் சனி, ஞாயிறு என 2 நாட்களுக்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டு விடுகிறது. அதற்காக அவருக்கு வழங்கப்படும் மொத்த சம்பளம் ரூ. 150 கோடி என்றும் தெரிய வந்துள்ளது. எனவே இப்படி 500 கோடி வரை இப்போதைக்கு சம்பாதித்துக்கொண்டு இருக்கும் கமல்ஹாசன் நேரத்தை நிர்வகித்து இன்னும் இன்னும் பல நூறுகோடிகளை சம்பாதிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே வலிமை, துணிவு படங்களை எடுத்த எச். வினோத் கமல் கால்ஷீட்டுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். இதற்கிடையே இந்தியன், புராஜெக்ட் கே படம், பிக்பாஸ் என தொடர்ந்து இருந்து வருவதால் எச் வினோத் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் 2025ம் ஆண்டு மத்தியில்தான் அவரது இயக்கத்தில் கமல் நடிப்பார் என்றும் பேச்சு அடிபட்டது.

ஆனால் இவ்வளவு காலம் ஒரு இயக்குநரை காத்திருக்க செய்வது முறையல்ல என உணர்ந்துக்கொண்ட கமல் வரும் மார்ச் மாதம் மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அதே மாதத்தில் எச் வினோத் இயக்கும் படமும் துவங்குகிறது. மணிரத்னத்துக்கு 15 நாள், எச் வினோத்துக்கு 10 நாள், அடுத்து மணிரத்னத்துக்கு 10 நாள், எச் வினோத்துக்கு 15 நாள் என மாறி, மாறி கால்ஷீட் தந்து இரண்டு படங்களிலுமே கமல் நடிக்கிறார். மணிரத்னம் படம் பான் இந்தியா படமாக, நிறைய ஸ்டார் நடிகர்கள் நடிப்பதால் கமல் வராத நாட்களிலும் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்படும். தங்கு தடையின்றி இரண்டு படங்களின் படப்பிடிப்புகளையுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்