- Advertisement -
Homeபொழுதுபோக்குஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா செல்லும் கமல்ஹாசன், டான்ஸ் மாஸ்டர் மனைவியுடன் பண்ற வேலையை பாருங்க -...

ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா செல்லும் கமல்ஹாசன், டான்ஸ் மாஸ்டர் மனைவியுடன் பண்ற வேலையை பாருங்க – கமல் மைண்ட் மாறுமா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இப்போது பிஸியாக படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தியன் 2 இந்தியன் 3 என இயக்குநர் ஷங்கர் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடிக்கிறார். அடுத்து ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில வாரங்களுக்கு முன் முடித்துள்ள கமல்ஹாசன், வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். எப்படியும் இந்த முறை திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவுடன் டெல்லிக்கு எம்பியாக செல்ல வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இதுகுறித்து தூது விட்டிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள், வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வது வழக்கமான ஒன்றுதான். தொழில் சார்ந்த விஷயங்களுக்காக அவர் செல்கிறார். அதே வேளையில் ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா செல்லும் அவரை ஒரு வாரம் பத்து நாட்கள் வரை தங்கி விடுகிறார். அல்லது ஒரு மாதம் வரை கூட அவர் அமெரிக்காவில் தங்கி, பிறகுதான் தமிழ்நாடு திரும்புகிறார்.

வழக்கமாக இந்த அமெரிக்கா பயணத்தை, ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் செல்ல வேண்டிய கமல், இப்போது ஜனவரி மாத இறுதியிலேயே சென்றுவிட்டார். அவருடன் டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி மனைவியும் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது கமல் நடித்தும் பிஸ்னஸ்களை அவர்தான் கவனித்து வருகிறார்.

கமல்ஹாசன் சில ஆண்டுகளாக உயர்தரமான கதராடை பிராண்டட் ரகங்களை விற்பனை செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பிக்பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு தனது நிறுவன தயாரிப்புகளை வழங்கினார். அதுமட்டுமின்றி அதே வகை பிராண்டட் ஆடைகளை அவரும் அணிந்து வந்து பிக்பாஸில் பங்கேற்றார்.

அதற்காக தான் இப்போது டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன், வியாபாரத்தை கவனித்து வருகிறார். சினிமாவில் நூற்றுக்கணக்கான கோடிகளில் வருமானம் பார்த்தாலும், இப்படி பிராண்டட் கதராடை வியாபாரத்திலும் பெரிய வருமானத்தை பார்த்து வருகிறார் கமல்ஹாசன். அமெரிக்காவுக்கு சென்றும், அங்கும் பிஸ்னஸ் செய்கிறார். அந்த வேலையில் டான்ஸ் மாஸ்டர் மனைவியும் பக்கபலமாக இருந்து உதவுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் கமல்ஹாசனின் பிஸ்னஸ் மைண்ட் மாறவே மாறாது என்கின்றனர் ரசிகர்கள்.

சற்று முன்