- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலகநாயகனுக்கு இப்போது வயது 69 அல்ல, 29 தான் - இந்த வயதிலும் சகலகலா வல்லவன்...

உலகநாயகனுக்கு இப்போது வயது 69 அல்ல, 29 தான் – இந்த வயதிலும் சகலகலா வல்லவன் என்பதைக் காட்டப் போற சம்பவம் பற்றி தெரியுமா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் எல்லைகளை கடந்த ஒரு இமாலய கலைஞனாக சாதனைகளை படைத்துக் கொண்டிருப்பவர். தனிப்பட்ட வாழ்வில் பல கடுமையான விமர்சனங்களை, சர்ச்சைகளை சந்தித்தாலும் கலை உலகை பொருத்த வரை கமல்ஹாசனின் நிழலை கூட நெருங்க முடியாத அளவுக்கு நிகரில்லாத கலைஞன் அவர் என்றால் அது மிகையல்ல.

நாயகன், மூன்றாம் பிறை, இந்தியன் படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பல ஆயிரம் முறை ரசிகர்களிடம் சிறந்த நடிகர் விருதை பெற்றுக் கொண்டே இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், தசாவதாரம், உத்தம வில்லன் என அவருக்கு மகுடம் சூடாத படங்களே இல்லை எனலாம்.

நடிகராக மட்டுமின்றி, இப்போது மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசியல் களத்தில் தனக்கான இடத்தை மக்களிடம் பெற போராடி வருகிறார். ஒரு கட்டத்தில் அது முடியாது என தெளிவான பிறகு, இப்போது திமுக தயவில், ராஜ்யசபா எம்பி யாக நாடாளுமன்றத்துக்கு செல்லவும் கமல்ஹாசன் தயாராகி விட்டார்.

அரசியலில் ஒரு சராசரி அரசியல்வாதியாக, கட்சித் தலைவராக கமல் நடந்துக்கொண்டாலும், அவரது தொழில் வாழ்க்கையில் சினிமாவில் அவர் தனது இடத்தை எப்போதுமே, யாருக்குமே விட்டுத்தர மாட்டார். இப்போதும் ரஜினி கமலின் நெருங்கிய நண்பராக இருந்தாலும், ஜெயிலர் படத்தை விடவும் இந்தியன் 2 படம் அதிக வரவேற்பை, வசூலை பெற வேண்டும் என்ற எண்ணம் கமலுக்கு இல்லாமல் போகாது.

இப்போது கமல்ஹாசனுக்கு வயது 69 ஆகிறது. ஆனாலும் இப்போதும் நடிப்பிலும், அரசியலிலும் பம்பரமாக சுழன்றுக்கொண்டே இருக்கிறார். சினிமா நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்கிறார். இனி அக்டோபர் மாதத்தில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 8ல் கலந்துக்கொள்வார். இந்த வயதிலும் ஓய்வின்றி உழைத்துக்கொண்டு இருக்கிறார் கமல்ஹாசன்.

அத்துடன், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கேஎச் 237 என்ற தனது 237வது படத்தில் நடிக்க கமல் கமிட் ஆகியிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்கள் இயக்கும் இந்த படம், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்தது. ஹாலிவுட்டில் வந்த ஜான்விக் படம் போல மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் சண்டை காட்சிகளில் கமல் டூப் போடுவதை விரும்பாத பட்சத்தில் 69 வயதிலும், இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க கமல் தயாராக இருக்கிறாரே, அவர் சகலகலா வல்லவன்தான் என்று பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்