- Advertisement -
சென்னையில் இன்று செய்தி வாசிப்பாளர் சங்க விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, என்னுடைய சின்ன வயதில் செய்தி வாசிப்பாளர்கள் தான் என்னுடைய ஹீரோக்கள். அப்போ ஷோபனா ரவி பாத்திமா பாபு தமிழன்பன் ஆகியோர் வீட்டுல பேசுவாங்க. அப்படித்தான் நான் வளர்ந்தேன். இந்த துறையினர் இருப்பதால் எல்லா குடும்பங்களிலும் அழகான தமிழ் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.





