அட்லீ பாலிவுட்டில் இயக்கியுள்ள “ஜவான்” திரைப்படத்தின் Pre release event சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அட்லீ, “ஜவான் படம் உருவாவதற்கு விஜய் அண்ணாதான் காரணம். என்னை கம்ஃபோர்ட் சோனில் இருந்து வெளியே கொண்டு வந்தவர் விஜய் அண்ணாதான்” என்று விஜய்யை குறித்து சற்று புகழ்ந்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சன் டிவி, அட்லீ விஜய்யை குறித்து பேசியதை எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள் என்று இணையத்தில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. விஜய் மீதுள்ள கோபத்தில்தான் சன் டிவி குழுமம் பழி வாங்கிவிட்டது என்று பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.
அதனை தொடர்ந்து சன் டிவி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜவான் ஆடியோ வெளியீட்டு விழாவை பார்த்து ரசித்தீர்களா? அந்த வீடியோவை தயாரித்து எடிட் செய்தது கோகுலம் மூவீஸ்” என்று டிவிட் செய்திருந்தது. தன் மீது களங்கம் வந்துவிடக்கூடாது என்பதால்தான் சன் டிவி நிறுவனம் இவ்வாறு டிவிட் செய்திருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி இது குறித்து சமீபத்தில் தனது வீடியோவில் பேசியபோது, இதற்கெல்லாம் ராஜ்கமல் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான விஜய் டிவி மகேந்திரன்தான் காரணம் என கூறியிருக்கிறார்.
அதாவது “ஜவான்” பட விழாவை கபிலன் Event Management என்ற நிறுவனம்தான் நடத்தியதாம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ் கமல் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான விஜய் டிவி மகேந்திரனின் நெருங்கிய நண்பராம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய அலுவலகத்திற்குத்தான் இந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் எல்லாம் அடிக்கடி வருவார்களாம்.
இந்த நிறுவனம் மகேந்திரனுடைய பினாமி நிறுவனம் என்று கூட சிலர் கூறுகிறார்களாம். இந்த நிறுவனம்தான் “ஜவான்” பட விழாவை நடத்தி அந்த வீடியோவை எடிட் செய்து சன் டிவிக்கு கொடுத்தார்களாம்.
ராஜ்கமல் நிறுவனத்தினர் விஜய்யிடம் பல வருடங்களுக்கு முன்பே கால்ஷீட் கேட்டிருந்தார்கள். ஆனால் விஜய் கால்ஷீட் தரவில்லையாம். அந்த கோபத்தில்தான் அட்லீ விஜய்யை குறித்து புகழ்ந்து பேசியதை எல்லாம் எடிட் செய்து தூக்கிவிட்டார்களாம்.
மேலும் இயக்குனர் அட்லீ விஜய் டிவி மகேந்திரனின் நெருங்கிய உறவினராம். “ஜவான்” பட விழாவை கபிலன் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்குத்தான் கொடுக்க வேண்டும் என்று அட்லீதான் கூறினாராம். ஆனால் கடைசியில் அட்லீ விஜய்யை குறித்து புகழ்ந்து பேசியதையே தூக்கிவிட்டார்கள் என்று பிஸ்மி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





