- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிவகார்த்திகேயன் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்த நடிகர் கமல்ஹாசன், அப்செட் ஆன எஸ்கே - கடைசியில்...

நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்த நடிகர் கமல்ஹாசன், அப்செட் ஆன எஸ்கே – கடைசியில் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அவர் நடிக்கும் படங்களையும் மற்ற ஹீரோக்கள் நடிக்கிற சில படங்களையும் அவரே சொந்தமாக தயாரித்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்த இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் சொந்த செலவில் தயாரித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூலும் பெரிய அளவில் இருந்து அதிக லாபத்தை கொடுத்தது.

- Advertisement -

அதன்பிறகு சிவகார்த்திகேயன் அவரது எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் நடித்த தாய்கிழவி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தையும் தயாரிப்பது நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனும் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிப்பதாக முதலில் ஒரு தகவல் வெளியானது. இப்போது நடிகர் கமல் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றும் ஒரு தகவல் பரவியது. சிவகார்த்திகேயனும் கமல் தன்னுடன் நடித்தால் தனது லெவல் வேற மாதிரி ஆகிவிடும் என்ற சந்தோஷத்தில் இருந்து வந்திருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே தி கோட் படத்தில் விஜயுடன் நடித்ததே தனக்கு பெரிய மரியாதையை பெற்றுத் தந்த நிலையில் இப்போது உலக நாயகனாக கொண்டாடப்படும் கமலுடன் சேயோன் படத்தில் நடித்த விட்டால் சினிமாவில் நமக்கு பெரிய இமேஜ் கிடைக்கும். படத்தின் வெற்றிக்கும் அது பெரிய பலமாக இருக்கும் என்றும் ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க மறுத்து விட்டார். சேயோன் படத்தில் நான் நடித்தால் அது என் படமாக மாறிவிடும். இது முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் படமாக மட்டுமே இருக்க வேண்டும். அதனால் நான் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் தான் பலத்த ஏமாற்றமடைந்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்