- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலக நாயகன்னு சும்மாவா சொன்னாங்க? - ஷூட்டிங் செல்லும் முன் இன்னும் அதை செய்கிறேன் -...

உலக நாயகன்னு சும்மாவா சொன்னாங்க? – ஷூட்டிங் செல்லும் முன் இன்னும் அதை செய்கிறேன் – நடிகர் கமல்ஹாசன் சொன்ன ஆச்சரிய தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிப்பில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் நடிகர் திலகம் சிஜாஜி கணேசன் நடித்த பழைய சில படங்களில் அவரது நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று கூட சிலர் விமர்சிப்பது உண்டு. ஆனால் கமல்ஹாசன் நடிப்பில் எப்போதுமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஒரு உன்னத கலைஞர்.

சொந்த வாழ்க்கையில் அரசியல் களத்தில் அவர் மீது பல்வேறு விதமான விமர்சனங்களும் சர்ச்சைகளும் இருந்தாலும் ஒரு திரைக் கலைஞராக கமல்ஹாசன் தொட்ட உச்சங்கள் யாரும் அருகில் நெருங்க கூட முடியாதது. நடிகராக இயக்குனராக பாடகராக தயாரிப்பாளராக கவிஞராக வசனகர்த்தாவாக தொழில்நுட்ப கலைஞராக கமலை கலைஞானி என கலைஞர் கருணாநிதி அழைத்ததே அதற்காக தான்.

- Advertisement -

நடிப்பை பொருத்த வரை நடிகர் கமல்ஹாசன் இன்னும் மிகவும் நேர்த்தியாக செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். அதனால் ஒவ்வொரு படத்திலும் தன்னை இன்னும் இன்னும் மெருகேற்றி யாருமே நெருங்க முடியாத அளவுக்கு கலையில் தனக்கான ஒரு இடத்தை அவர் உருவாக்கி கொண்டு விட்டார். அதனால் கமலை பொருத்த வரை கலையுலகில் அவர் ஒரு பொக்கிஷமாக தான் மதிக்கப்படுகிறார்.

வருகிற ஜூன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக்லைஃப் படம் ரிலீஸாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24ம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் நேரடியாக பெர்பாமென்ஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசனிடம், இதுவரை 230 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டீர்கள். இப்போதும் ஒத்திகை பார்த்து விட்டு தான் நடிக்க போவீர்களா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்து கூறியதாவது. ரிகர்சல் பார்க்காமல் எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டேன்.

படப்பிடிப்பு இல்லை என்றால் நடிப்பு பயிற்சியில்தான் இருப்பேன். கேமராவுக்கு முன்பாக நடிப்பதை விட இதுவே எனக்கு பிடிக்கும். ஒத்திகை கண்டிப்பாக தேவை. நான் ரிகர்சல் செய்யாமலேயே நடித்து விடுவேன் என யாராவது சொன்னால் அது தற்பெருமை கூட அல்ல, சில்லறைத்தனம் என்று நடிகர் கமல்ஹாசன் சற்று கடுமையாகவே கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்